January 30, 2018

வஸீம் படு­கொலை, மஹிந்த குடும்­பத்­துடன் நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் விசா­ரணை

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொலை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் குடும்­பத்­தா­ருடன் நெருங்­கிய தொடர்­பி­லி­ருந்த சி.எஸ்.என். அலை­வ­ரி­சையின் முன்னாள் முகா­மை­யாளர் யசாரா அபே­நா­யக்க உள்­ளிட்ட 9 பேரிடம் விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ளது.

இந்த ஒன்­பது பேரில் மஹிந்த குடும்­பத்­தா­ருடன் நெருங்­கிய தொடர்பில் இருந்­த­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக அவர்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கிய பொலிஸ் மற்றும் கடற்­படை உறுப்­பி­னர்­களும் அடங்­கு­வ­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

வஸீம் தாஜுதீன் படு­கொ­லையின் பின்னர் கொலைக்­கான கார­ணத்தைக் கண்­ட­றியும் விசா­ர­ணை­களில் பெரிதும் பெயர் குறிப்­பி­டப்­பட்ட யோசித்த ராஜ­பக்­ ஷவின் முன்னாள் காதலி எனக் கூறப்­படும் யசாரா அபே­நா­யக்க மற்றும் சரத் கீர்த்தி குமார, மஹ­து­ரகே இந்­திக துஷார, சஞ்­சய நவ­ரட்ண, துமிந்த நவ­ரத்ன, சமிந்த பிரி­ய­தர்­ஷன, ஜயந்த குமார, பேர்ட்டி டைடர்ஸ், அஜித் குமார கபில ஆகி­யோரே விசாரணைக்கு உட்­ப­டுத்தப்­பட்டு அவர்­க­ளி­ட­மி­ருந்து வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­டுள்­ளன.

இந்நிலையில் வஸீம் தாஜு­தீனின் கொலை­யா­ளி­களை துரி­த­மாகக் கண்­ட­றிய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­க­ரவின் நேரடி மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விக்­ர­ம­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக மனிதப் படு­கொலை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க உப பொலிஸ் பரிசோதகர் ரத்னபிரிய ஆகியோர் அடங்கிய குழுவினர் பல்முனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(எம்.எப்.எம்.பஸீர்)

3 கருத்துரைகள்:

இந்த துரித விசாரணை பெப்ரவரி 10யுடன் முடிவடைந்து அடுத்த தேர்தல் திகதி தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டவுடன் ஆரம்பித்து அந்த தேர்தல் முடிவடைவதுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையினுடைய நீதி விசாரணை
நடைமுறைகள் மிகவும் ஆள அகலமான
விசாரணகைள் நிறைந்ததாகும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துகொள்ளலாம்
ஆனால் ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக்கூடாது என்ற நியதியிலே
இங்கு விசாரணைகளும் தீர்ப்புகளும்
நடந்து கொண்டிருக்கன்றன. எனவே
ஒரு குற்றம் சம்பந்தமான சாட்சிகளையும்,தடயங்களையும் ஆதாரங்களையும் சரியாகவும் உண்மைத்தன்மைகவும்
நீதிமன்றத்திலே முன்வைத்து அவைகளை குற்றவாளிகளுக்கு எதிராக நரூபிக்க வேண்டிய
தேவை அதைபுலனாய்வு செய்கின்ற
வர்களுக்கும்,பொலிசாருக்கும்,சட்டமா
அதிபர் திணைக்களத்திற்கும் கடமையாக உள்ளது.இல்லா விட்டால்
குற்றவாழி எளுதில் தப்பித்துக்கொள்வான். இந்த அடிப்படையிலே வசீம் தாஜுதீன் போன்ற முக்கியமானவர்களின் வழக்குகளில் காலதாமங்கள் ஏற்படுகின்றவேதவிர அரசியல் தலையீடுகளால் அல்லது வேறு Influence மூலமாக இவைகள் தாமதமாகின்றன என
கொள்ளமுடியாது.நீதிவிசாரணை, மற்றும்
சட்ட சிக்கல்களில் ஏற்படும் தாமதங்களை
குறைப்பதற்கு வேறு மார்க்கங்களை கையாள்வது பற்றி அண்மைக்காலங்களில் ஜனாதிபதி அவர்கள் தமது நிலப்பாடுகளை தெரிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment