January 18, 2018

இறந்த பெண்ணிற்கு, குழந்தை பிறந்ததா..?

தென் ஆப்ரிக்காவில் இறந்த நிறைமாத கர்ப்பிணி பெண் புதைக்கும் போது திடீர் குழந்தை பிறந்ததால் உறவினர்கள் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தென் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள தயிஸி என்னும் கிராமத்தில் 33 வயது தக்க நிறைமாத கர்ப்பிணி மடோயி இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து போனார். இறுதிசடங்கள் முடிந்த பிறகு இவரது உடல் அடக்கம் செய்வோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மடோயின் சடலத்தை புதைப்பதற்காக ஊழியர்கள் சடலத்தை வெளியே எடுத்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. இறந்த பெண் எப்படி குழந்தை பெற்று இருக்க முடியும் என்று குழப்பத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

"நாங்கள் இறந்த உடலை  சவப்பெட்டியில் இருந்து வெளியே  எடுத்தபோது, ​​அவளுடைய கால்கள் இடையே ஒரு  பிறந்த குழந்தை இருப்பதை பார்த்தோம் அப்போது "குழந்தை இறந்துவிட்டது கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், பயந்துவிட்டோம், நாங்கள் குழந்தை ஆணா பெண்ணா என்பது குறித்து  பார்க்க இல்லை.

"நான் 20 வருடங்களுக்கும் மேலாக  இந்த பணியில் இருந்து வருகிறேன்.  ஒரு இறந்த பெண்ணைப் பெற்றெடுப்பதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. அதிர்ச்சியுடன் கூறினார். பின்னர் இது குறித்து  மடோயின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் இது தீய சக்தியின் வேலை தான். என் மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது திடீரென இறந்து போனாள். இது தீய சக்தியின் வேலை தான் எனவே தாயின் உடலையோடு சேர்த்து  குழந்தையின் உடலையும் எரித்து விடுங்கள் என்று கூறினர். 

இந்த தகவல் காட்டுத்தீ போல் கிராம்  முழுவதும் பரவியது. நிறைமாத கர்ப்பிணி ஒருவர் இறந்த பிறகு எப்படி பிரசவிக்கும் முடியும் என்று கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 மருத்துவர்களிடம் மடோயி குடும்பத்தினர் ஆலோசனை நடத்தினர்.

‘ஆப்பிரிக்காவில் இதுவரை இப்படி நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.  இறந்த உடலில் நுண்ணியிரிகளின் செயல்பாட்டால் இது நடந்திருக்கலாம். அப்படியில்லை என்றால் இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வால் குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இது இயற்கையான ஒன்றுதான். 

தீயசக்தி எல்லாம்  ஏதுமில்லை என்று கூறினார்கள். பின்னர் மடோயியின் உடல் குழந்தையின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. 

1 கருத்துரைகள்:

இது போன்ற இன்னொரு சம்பவம் மாலைத்தீவில் நடந்துள்ளது.  ஆனால் இது அதைவிட விசேஷமானது.

காரணம், உயிருடன் பிறந்தது மட்டுமல்ல 1995ல் இப்பிள்ளை  சிறுவனாக தலை நகர் மாலேயில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவரைக் காட்ட முடியுமென்றும் என்னிடம் கூறினர் அப்போது என்னுடன் பணி புரிந்த மாலைதீவு வாசிகள்.

இன்னும் சுவாரசியமானது,  இறந்த குடும்பத்தினரை 'ஸியாரத்' என்னும் தரிசனம் செய்வதற்காக அடக்கஸ்தலம்  சென்ற ஒருவர்,  அங்கு கேட்ட ஓர் குழந்தையின் அழுகுரல்தான்  அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

அடக்கஸ்தலத்தைத் திறந்து பார்த்தால் அக்குழந்தை இறந்த தாயின் மார்பிலிருந்து பால் அருந்தும் நிலையில் தான் அக்குழந்தையை கண்டு பிடித்துள்ளனர்.

அப்பிள்ளை இன்னும் வாழ்வதாக நான் நினைக்கிறேன். மாலே உடன் தொடர்புள்ளவர்கள் மேலதிக விபரங்களை கேட்டறியலாம்.

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
(அல்குர்ஆன் : 10:31)
www.tamililquran.com

Post a Comment