January 21, 2018

சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் நிறையவே புத்திமதிகள் சொல்லியிருக்கிறேன் - அதாவுல்லா

வடகிழக்கை பிரித்து விட்டோம், பயங்கரவாதத்தினை அழித்துவிட்டோம் அடுத்ததாக மாகாணசபை முறைமை இலங்கைக்கு தேவையில்லை என்பதனை நிலைநாட்டவே இம்முறை குதிரைச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்தார்.

மருதமுனையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் ஒரு மேடையில் கூடியிருந்து எங்களுக்கான யாப்பை எழுதாமல் நோர்வே, இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தங்களது தேவைகளுக்காக யாப்பெழுதிக்கொடுக்க முடியாது.

அதனை தற்போதைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெரிந்து கொண்டு தங்களது அரசியலை செய்து வருகின்றார்கள்.

இனிமேல் எந்த பாகுபாடுகள் இல்லாமல் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகிய மூன்று இனத்தவரும் சேர்ந்து எங்களுக்கு அமைவான யாப்பினை நாங்களே எழுதமுற்படுவோம் என்பதனை அறைகூவலாக விடுக்கின்றேன்.

தற்போது இலங்கை அரசியலில் வடகிழக்கை இணைப்பதற்கு முடிவெடுத்து விட்டார்கள், ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கும் ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்து விட்டார்.

ஆனால் சர்வஜன வாக்கெடுப்பென்று போனால் நிச்சயம் தோற்று விடுவார்கள். இது தொடர்பாக சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் நிறையவே புத்திமதிகள் சொல்லியிருக்கிறேன் என்றார்.

3 கருத்துரைகள்:

One of you is enough to bury the muslim ideology in Srikanka

அதாவுல்லா அவர்களே, உங்களை அவர்களே என்று விழித்தது உங்களுக்கு கொடுக்கும் மரியாதைக்காக அல்ல அது எங்களுது பன்பை வெளிப்படுத்துவதட்காக... இந்த நாட்டின் முது பெரும் அரசியல் தலைவர், ஒரு இனத்தின் அரசியல் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மூத்த அரசியல் வாதியான சம்பந்தன் ஐயா அவர்களை நீர் ஒருமையில் குறிப்பிட்டது, உம்மை மிகவும் நாகரீகம் குறைந்த தரக்குறைவான ஒரு அரசியல் வாதியாகவே பார்க்கிறோம்.
ராசா அதாவுல்லா, உமக்கு உரிமை என்றால் என்ன என்று புரியுமா, மாகாண சபையின் அரசியல் அதிகார பரவலாக்கல் என்றால் என்ன என்று புரியுமா? சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியுமா? தெரு நாயும் பணக்கார வீட்டு நாயும் சந்தித்து கொண்ட போது உள்ள ஒரு கதை உண்டு அதை தேடிப்படித்துப்பாரும் தெரு நாய் சொல்லும் சுதந்த்திரத்தை பற்றி.
அது சரி ஏதோ அதாவுல்லாதான் இந்த வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர் மாதிரி தொடர்ந்தும் பேசுவருகிறீர். அப்போ jvp வழக்கு போட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்த விசயத்தை என்ன என்று சொல்லுவது.

இலங்கையின் சரித்திரத்தில் முஸ்லிம்களும் அவர்களது மார்க்கமும் சொல்லொணா துன்பத்தையும், தாக்குலையும், நெருக்கடிகளையும், பர்தாவோடு செல்லும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டதும், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், முஸ்லிம்கள் இந்த நாட்டின் இரண்டாம் தர பிரைஜையாக நடத்தப்பட்டதும், அவர்களது பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தல் நிலவியதும், முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டதும், சொத்துக்கள் சூறையாடப்பட்டதும் இவை அனைத்தும் நடந்தேறிய போது நீங்கள் அந்த அரசாங்கத்தின் மந்திரியாக இருந்து கொன்டு ராஜபக்ச அன் கோ கிள்ளிப் போட்டதை அள்ளிக்கொண்டு இந்த முஸ்லீம் சமூகம் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என்று இருந்து விட்டு இப்போது வந்து கதை விடுகின்கிறீரே ... உமக்கெல்லாம் மேடை போட்டு அரசியல் வாதியாக வரவேற்று உமது பச்சை புளுகு பேச்சை கேட்பதட்கும் இன்னும் ஒரு கூட்டம் இருக்கிறதே என்று நினைக்கும் போது இந்த முஸ்லீம் சமூகம் அரசியல் உரிமைகளையும் கெளரவமான வாழ்க்கையையும் அடைவதட்கு இன்னும் நீண்ட காலம் பயணிக்க வேண்டி வரும் அதை இந்த சமூகம் அனுபவித்தே ஆகவேண்டும்.
தற்போதைய முஸ்லீம் தலைவர்கள் என்று சொல்பவர்களினதும் தனி கட்சி நடத்துபவர்களினதும் பொருளாதாரம் அரசியலுக்கு முன் அரசியலுக்கு பின் என்று ஒரு லிஸ்ட் தருகிறோம் அதில் இருந்து சிந்தியுங்கள் முஸ்லிம்களின் அரசியல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று.

**அதாவுல்லா அவர்கள் அரசியலுக்கு முன் ஒரு புஷ் பைசிகளுடன் வாத்தியார் தொழில். ஆனால் இப்போது அவருக்கே தெரியாது எவ்வளவு சொத்தும் பணமும் இருக்கிறது என்று. இலங்கையின் தரமான பணக்காரர்களில் இவரும் ஒருவர்.
** ஹக்கீம் அவர்கள் புகாரிதீன் ஹாஜியாரிடம் வேலைக்கு இருந்தவர். இப்போது எவ்வளவு சொத்தும் பணமும் உள்ளது என்று ஹாரீஸிடம் கேட்டால் தெரியும்.
** ஹிஸ்புல்லா அவர்கள்: முதல் முதல் தொழிலே எம் பி தொழில் தான் ஏனெனில் பேராதெனிய பல்கலை கழகத்தில் இறுதியாண்டு எம்பி யாக வந்தே எழுதியவர். இப்போது நாடு தழுவிய பணக்காரர்களில் ஒருவர்.
** றிசாத் அவர்கள் சொப்பிங்க் பையுடன் அகதிமுகாமில் வாழ்ந்தவர். இப்போது மேட்குறிப்பிட்ட அனைத்து குபேரர்களுக்கும் சவால் விடுக்கும் பணபலமும் அரசியல் பலமும் உள்ளவர் .
இப்படி இன்னும் பலபேர், ஹாபிஸ் நசீர் போன்றவர்கள் ....

ஆனால் தமிழ் தலைவர்களை சற்று உற்று நோக்கினால் அவர்களது முழு வாழ்க்கையையும் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள்... பணத்துக்கோ பதவிக்கோ சோரம் போகாதவர்கள்.
நீங்கள் தலைவர் என்று கூவிக்கொண்டு உங்களது அரசியல் பிழைப்பு நடத்தும் மாபெரும் தலைவர் எம் எச் எம் அஸ்ரப் அவர்கள் இந்த தமிழர் விடுதலை கூட்டணியின் பாசறையில் வளர்ந்தவர். 1977 தேர்தலில் அமிர்தலிங்கம், அவரது துணைவியார் மங்கயற்கரசி, காசியானந்தன், வரிசையில் எம் எச் எம் அஸ்ரப் அவர்களும் தேர்தல் பிரசாரங்களில் தமிழர் விடுதலை கூட்டணியின் மேடைகளில் உலாவந்தவர் தான்.
உமக்கு இதுவெல்லாம் புரியாது. இன்னும் ஒரு முறை எம்பி பதவியை பெற்று கொண்டு அதில் முஸ்லிம்களை விற்று மந்திரியாகி எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று அலையும் உங்களக்கு எங்கே விளங்கப்போகிறது உரிமை, மாகாணசபை அதிகாரம், சும்மா மேடை ஏறியவுடன் எதோ பிரபாகரனுடன் நேருக்கு நேர் நின்று போராடி பிரபாகரனை தோக்கடித்தவர் போலும், உயர் நீதிமன்றில் ஏறி வழக்கு பேசி வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர் போலும் நீங்கள் ஜால்ரா பேசுவதும் அதை ஒரு கூட்டம் கேட்டுக்கொண்டு உங்கள் பின்னால் நீங்கள் கிள்ளிப் போடுவதை அள்ளிக்கொண்டு போவதட்கு அலைவதும் இந்த சமூகத்தின் சாபக்கேடாகவே பார்க்கிறோம்.

குறிப்பு: மருந்துக்காக சில மூலிகைகளையும், சில அரப்புக்களையும் பாவிக்கலாம் என்ற ஒரு விளக்கம் அதாவுல்லா சாரிடம் உண்டு. அதன் காரணமாக இப்படியெல்லாம் பேசுகிறாரோ தெரியாது.

குருவியின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். தகுதியும் தகைமையும் வாய்ந்தவர்கள் மௌனமாக இருக்கும் போது அக்கறைப்பற்றான் போன்ற ஊத்தைகள் தலைநிமிர முயற்சி செய்வது தவிர்க்க முடியாது.

Post a Comment