Header Ads



இலங்கையில் நாய்­கள் வேட்­டை­யா­டிய, விலங்­கு­களின் இறைச்­சியை விநி­யோகித்தவர்கள் கைது

நாய்­களை ஈடு­ப­டுத்தி வன­வி­லங்­கு­களை வேட்­டை­யாடி அவற்றை இறைச்­சி­யாக்கி சீன உண­வ­கங்­க­ளுக்கு விற்­பனை செய்­து­வந்த சந்­தேக நபர்கள் மூவரை கைது செய்­துள்­ள­தாக மார­வில பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வுக்கு கிடைத்த  தக­வ­லொன்­றுக்­க­மைய மேற்கொள் ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பின்­போதே நாத்­தாண்­டியா – பண்­டா­ர­நா­யக்­க­புர பிர­தேசத்திலுள்ள குறித்த இறைச்சி தயா­ரிப்பு நிலை­யத்­தினை சுற்­றி­வ­ளைத்­துள்­ளனர்.

பண்­டா­ர­நா­யக்­க­புர பிர­தே­சத்­தி­லுள்ள வனப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து இச்­சந்­தே­க­ந­பர்கள் குறித்த விலங்­கு­களை வேட்­டை­யா­டி­யுள்­ள­தா­கவும், அவ்­வாறு வேட்­டை­யா­டப்­பட்ட சுமார் 22 கிலோ­கிராம் நிறைக்­கொண்ட முள்­ளம்­பன்றி மற்றும் 1 கிலோ­கிராம் நிறை­யு­டைய ஆமை இறைச்­சி­களை கைப்­பற்­றி­ய­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் மூவரும் லுணு­வில – மிரிஸ்­ஸன்­கொ­டுவ பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இவர்கள் நாய்­களை ஈடு­ப­டுத்தி காட்­டு­வி­லங்­கு­களை அச்­சு­றுத்தி அவை பயந்து ஓடும்­போது, அவற்றை ஓரி­டத்தில் சுற்­றி­வ­ளைத்து பொல்­லு­களால் தாக்கிக் கொலை செய்­துள்­ள­தாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.