Header Ads



இப்படியும் ஒரு மன்னர் (படங்கள்)


பிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரையோரம் பகுதியில் மணல் கோட்டை அமைத்து 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்தவர் மார்சியோ மி‌ஷயல் மடோலியாஸ் (44). இவர் இங்கு மன்னராக இருக்கிறார்.

ஆனால் இவர் கோட்டை கொத்தளங்களால் ஆன அரண்மனையில் வசிக்கவில்லை. மாறாக மணல் கோட்டையில் வசிக்கிறார். மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான இவர் சிறு வயதில் இருந்தே கடற்கரையில் வாழ்ந்து வந்தார்.

எனவே இவருக்கு வேறு இடத்துக்கு செல்ல மனமில்லை. கடற்கரையோரம் வசிக்க வேண்டுமானால் அதிக அளவு வீட்டு வாடகை கொடுக்க வேண்டியிருந்தது. எனவே அவரே தனக்காக அரண்மனையை கட்ட முடிவு செய்தார். மணல் சிற்பங்கள் செய்யும் திறன் படைத்த அவர் அழகான மணல் அரண்மனையை கட்டினார்.

அதில் கடந்த 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அது இடிந்து விழாமல் இருக்க அவ்வப்போது அரண்மனையின் மீது தண்ணீர் தெளித்து கொள்கிறார்.

இந்த மணல் கோட்டையை காண பலர் அங்கு வருகின்றனர். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அவர் தலையில் கிரீடமும் செங்கோலும் வைத்துள்ளார். அவரை அனைவரும் மன்னர் என்றே அழைக்கின்றனர். இருந்தாலும் மணல் கோட்டையும், சில புத்தகங்கள் மட்டுமே இவரது சொத்தாக உள்ளது.


No comments

Powered by Blogger.