Header Ads



ரவி - மைத்திரி சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் ரவி கருணாநாயக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கிடையாது என்ற நிலைப்பாட்டிலிருந்த நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்.

எனவே, உரியவகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், குற்றச்சாட்டுக்குள்ளாகி பதவி துறந்துள்ளவர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்குவதிலும் கருணை காட்டப்படாது என்று ஜனாதிபதி இதன்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.

இந்தச் சந்திப்பில் பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நிராகரித்துள்ள ரவி கருணாநாயக்க, தம் மீது போலிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.