January 29, 2018

எச்சரிக்கையாக இருங்கள்...

ஜுமுஆ குத்பாக்களை நிகழ்த்தும்  இமாம்களுக்கு வழங்க பட்டு வரும் பிரயாண செலவிற்கான சிறு தொகை பணத்தை அவர்கள் பெறுவது தவறானது, அவ்வாறு பெறுவது வியாபார அடிப்படையிலானது, ஜுமுஆ நேரத்தில் அள்ளாஹ் தடை செய்துள்ள வியாபாரத்தை உலமாக்கள் எவ்வாறு மேற்கொள்ள  முடியும் போன்ற அர்த்தத்தில்   கடந்த சில தினங்களாக வதந்தி ஒன்றை பரப்பி விட்டு மகிழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் அதனை Share செய்து வரும் அறிவீனர்களுக்கும் ஒரு எச்சரிக்கை.  

அவதானமாக இருப்போம். அறிவீனத்திற்கு துணை  போகாதிருப்போம். 

எம்மை வந்தடையும் அனைத்து Clips களையும் ( அவற்றை பற்றிய சரியான தெளிவு இன்றி, உன்மை தன்மை, நம்பக தன்மை பற்றி தெரியாது )  Share பண்ணாதிருப்போம். 

ஜுமுஆ ஹுத்பா செய்யும் உலமாக்களுக்கு வழங்க பட்டு வரும் பிரயாண செலவிற்கான சிறு தொகை பணம் கூடாதது  என  கீழ்தரமாக யாரோ ஒருவரால் எழுத பட்ட பதிவொன்று  இன்றைய தினங்களில் சில சமூக வலைதளங்களுக்கூடாக பகிரப்பட்டு கொண்டருப்பதை இன்றும் ( 29/01/2018 ) இரண்டு தினங்களுக்கு முன்பும் கண்ணுற்றேன். குறித்த பதிவு தற்போது பரவலாக சுற்றிக் கொண்டிருக்கின்றது. 

குறித்த பதிவை உங்கள் பார்வைக்காக முதலில் இங்கு தருகின்றேன். 


"ஹலோ,மௌலவியா?"

"ஓ,யாரு பேசுற?"

"மௌலவி இன்டக்கி ஒங்கட பிஸ்னஸ் பற்றிய ஜும்மா பயான் சுபிரியா இருந்த"

"ஜஸாக்கல்லாஹ்"

"மௌலவி ,அதில் சின்ன டவுட் ஒன்டு கேக்கவா?"

"ஆ, கேளுங்கோ"

"ஜும்மா நேரத்துல பிஸ்னஸ் பண்ணுறது,சல்லி சம்பாதிக்கிறது எல்லாம் ஹராமா?"

"பச்ச ஹராம் மகன் பச்ச ஹராம்"

"அப்ப மௌலவி,  இன்டக்கி ஜும்மாக்கு பள்ளியால உங்களுக்கு எவ்வளவு  சல்லி தந்த?"

"அதை எதுக்கு கேக்குற?"

"இல்ல மௌலவி, என்ட டவுட் எனத்தியன்டால் ஜும்மா நேரத்துல நீங்க பயான் பண்ணி சம்பாதிக்கிற சல்லி ஹராமா ஹலாலா?"

"அடேய்,அதபு கெட்டவன், சங்கை தெரியாதவன் வைடா போனை"

#சில வருடங்களுக்கு முன் ஊரில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி

குறித்த பதிவை வாசித்திருப்பீர்கள். சில வருடங்களுக்கு முன் ஊரில் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி என்று வேறு ஒரு பொய்யான குறிப்புடன் அதனை பதிவு செய்துள்ளார் அடையாளம் அற்ற அந்த பொய்யர். 

உலமாக்களை அவமதிக்கும் விதத்தில் எவ்வித அடிப்படையும் இன்றி பதிவு செய்ய பட்டுள்ள குறித்த கிறுக்கு தனமான Message இற்கு ஷரீஆ ரீதியிலான சிறந்த பதில்கள் தாராளமாக இருக்கின்றன. 

ஸூரா ஜுமுஆவில் ( ஜுமுஆ நேரத்தில் வியாபாரம் புரிவது பற்றி அள்ளாஹ்  குறிப்பிடுகையில் ) 

“ ஜுமுஆவுடைய தினத்தில் (ஜுமுஆவிற்கான ) அழைப்பு விடுக்க பட்டு விட்டால் ( அதான் சொல்ல பட்டு விட்டால் ) வியாபாரத்தை விட்டு விடுங்கள்” 

என்று அருளியுள்ளான். 

ஜுமுஆவிற்கான அழைப்பு விடுக்க படும் நேரத்தில் இருந்து ஜுமுஆ தொழுகை முடியும் வரை 
“வியாபாரத்தில் ஈடு படுதல் அல்லது வியாபாரத்துடன் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் ஈடு படுதல், வியாபார ஒப்பந்தங்கள் புரிதல்”  உள்ளிட்ட சகல விதமான வியாபார நடவடிக்கைகளையும் அள்ளாஹ் தடுத்துள்ளான் என்பதையே குறித்த குர்ஆன் வசனம் உணர்த்துகின்றது. 

ஜுமுஆவின் போது வியாபாரத்தை விட்டு விடுங்கள் என்று தடுக்க பட்டிருப்பதில்  ( ُاَلْبَـيْع - அல் bபைஉ ) அதாவது வியாபாரம் என்ற பதத்தினை அள்ளாஹ் மிக வெளிப்படையாகவே பயன் படுத்தி இருக்கின்றான். 

ஜுமுஆ பேருரை புரிந்து விட்டு   ஜுமுஆ தொழுகையை நடாத்தும் உலமாக்களுக்கு ( அவர்களது பிரயாண செலவு, நேரம், முயற்சி, சிரமம்  போன்றவற்றை கருத்திற் கொண்டு )  வழங்க பட்டு வருகின்ற சிறு தொகை பணம் வியாபார ஒப்பந்தத்துடன் வழங்க படக் கூடியதா ? 

வியாபாம் என்ற வார்தைக்கான கருத்து என்ன ? மார்க்க ரீதியிலான அர்த்தம் என்ன ? வியாபாரத்திற்கான நிபந்தனைகள், அர்க்கான்கள் யாவை ? ஸீgகா எனப்படும் வார்த்தை பிரயோகத்தின் அவசியம் போன்ற எவை பற்றியும் எவ்வித தெளிவும்  இல்லாத ஒரு மடையரால்  எழுத பட்ட பதிவே இன்றைய தினங்களில் சமூக வலைத்தளங்களில் பகிர பட்டு வருகின்றது. 

இஸ்லாமிய வியாபார முறை பற்றி ஷரீஆ  ரீதியாக தெளிவு படுத்த பட்டுள்ள அனைத்து விடையங்களையும் இங்கு பதிவிடுவது எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் சிறமத்தை ஏற்படுத்தலாம். 

ஆகவே விரிவை தவித்து அவற்றில் ஒரேயொரு விடையத்தை  மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். 

பணத்திற்கு பகரமாக ஒரு பொருளை அல்லது ஒரு பொருளுக்கு பகரமாக இன்னுமொரு பொருளை ( விற்பவர் வாங்குபவர் என இரு தரப்பினராலும்  விலை, பெறுமதி பேசி உறுதி செய்ய பட்ட நிலையில் ) உடந்தையாக்கி  கொள்வதையே வியாபாரம்  எனப்படும்.  ஆக குறித்த  அடிப்படையை புரிந்து கொண்டே குறித்த விடையத்தை அணுகுவோம் . 

எந்தவொரு ஆலிமும் தான் புரியும் ஹுத்பா பிரசங்கத்தற்காக தனக்கு இவ்வளவு பணம் தர பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்  ஹுத்பா பிரசங்கம் புரிந்ததில்லை.  

( இவ்வளவு பணம் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் இலங்கையில் இதுகாலவரை யாரேனும் ஒரு ஆலிமேனும்  மிம்பரில் ஏரியதாக  எமக்கு கேள்வி பட்டதில்லை )  

பெரும் பாலும் ஹுத்பா முடிந்தவுடன் நிருவாகிகளில் ஒருவர் ஒரு Envelop Cover ஐ ஹுத்பா செய்த இமாமின் சட்டை பைக்குள் போட்டு விடுவார். இமாமுக்கு அதில் எவ்வளவு பணம் இருக்கும் என்பதும்  தெரியாது. 500, 1000, 2000 அல்லது 3000 என இமாம் பிரயாணித்து வந்த தூரம், பிரயாண செலவு ஆகியவற்றை பொருத்து ( அத் தொகை ) வித்தியாச படலாம். கொடுக்க படும் Cover ஐ உடன் இமாம் பிரித்து பார்ப்பதும் இல்லை.  பிரித்து பார்த்து விட்டு இது போதாது என்று  அதிருப்தி கொண்டு பேச்சு வார்த்தை நடாத்துவதும் இல்லை. அவரது பிரயான செலவு, சிறமம், நேரம் என அனைத்தையும் கருத்திற் கொண்டு ( எவ்வித நிபந்தனைகளோ, பேச்சு வார்த்தைகளோ இன்றி ) நிருவாகிகளால் வழங்க படும் ஒரு சிறு தொகை பணத்தை வியாரம் என்றும் ஜுமுஆ நேரத்தில் அள்ளாஹ் தடை செய்துள்ள வியாபாரத்தை உலமாக்கள் செய்து வருகின்றனர் என்ற கருத்தை தொனிக்கும் வகையிலும்  எழுதுவது அடி மட்ட முட்டால்த்தனமாகும். அதனை Share பண்ணி திரியும் அறிவாளிகளை எவ்வாறு அழைக்கலாம் ? 

வியாபாரம் என்றால் என்ன என்று நான் மேலே குறிப்பிட்டுள்ள வியாபாரத்திற்கான  விளக்கணத்தை மேலும் ஒரு முறை வாசித்து கொள்ளுங்கள். அப்போது ஹுத்பாவிற்காக வழங்க பட்டு வரும்  பணம் வியார அடிப்படையிலானதா இல்லையா என்பது தெளிவாக புரியும். 

குத்பா பேருரைகளிற்காக வழங்க பட்டு வரும் பணத்தை நான் ஒருபோதும் எந்த பள்ளி வாசலிலும் பெற மாட்டேன் என்ற நிய்யத்துடன் தனது கையால் செலவு செய்து கொண்டு ஜுமுஆவிற்கு செல்லும் இமாம்களும் எம்மில் இருக்கின்றனர். போதிய வருமானம் இன்றி, வறுமை நிலைக்கு உற்பட்ட பகுதிகளில் இயங்கி வரும்  பள்ளிவாசல்களில் ஜுமுஆ உரைகளிற்காக வழங்க பட்டு வரும் பணத்தை நான் ஒரு போதும்   பெற மாட்டேன் என்ற நிய்யத்துடன் தூர இடங்களில் இருந்து தமது கரத்தால் செலவு செய்து கொண்டு போய் ஹுத்பா  உரை நிகழ்த்தி வரும் உலமாக்களும் எம்மில் இருக்கின்றனர். 

பள்ளிவாசல்களில் ஜுமுஆவிற்கு பின்பு பிடிக்க படும் பக்கட்டுகளுக்கு ( Bucket )  தனது பொக்கட்டில் இருந்து ஒரு தொகை பணத்தை நன்கொடையாக போட்டு விட்டு, பள்ளிவாசல்களில் குத்பாவிற்காக கொடுக்க படும் பணத்தையும் பெறாது திரும்பிச் செல்லும் உலமாக்களும் இருக்க தான் செய்கின்றனர். 

இதில் மனவேதனையான விடையம் என்னவெனில்  உலமாக்களில் 90% ஆனவர்கள் தமது சேவையை அரபு மத்ரசா உஸ்தாத், பள்ளிவாசல் இமாம், குர்ஆன் கற்றுக் கொடுக்கும் முஅல்லிம் என்ற வரையரைக்குள் சுருக்கி கொண்டு இன்று வரை அவ் இடங்களை நிருவகிக்கும் கஞ்சர்களால்  மாதாந்த  சம்பளமாக  வழங்க பட்டு வரும் 20,000,  25,000 அல்லது 35,000 ரூபாய்களுடன் எளிமையான முறையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே வேளை எவ்வித கல்விப் பின்னனியோ தகைமைகளோ அற்ற பலரும் ( தினக்கூலிகள் உற்பட ) ஒரு நாளைக்கு 1500 ரூபா 2000 ரூபா என்ற அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு இலகுவில் 45,000 அல்லது 50,000 இற்கும் அதிகமாக சம்பாதித்து கொள்கின்றனர்.   

ஆக, 
இவ்வாறான நிலையில் வாழ்வாதாரத்தில் அள்ளாஹ் வழங்கி வரும் பரக்கத் மற்றும் தாம் கடைபிடித்து வரும் ஆடம்பரமற்ற எளிமையான வாழ்கை ஆகியவற்றுடன் பண்மடங்காக எகிரி இருக்கும் இன்றைய வாழ்கை செலவுக்கு முகம் கொடுத்து வரும் உலமாக்களுக்கு அவதூரை  ஏற்படுத்தி வருபவர்களும் அதனை Share மற்றும் ஏளனமாக Comment  பண்ணி கொண்டுமிருக்கும் மடையர்களும்  இனியேனும் சிந்தித்து நடக்கட்டும். 

உங்கள் வாழ்கையில் எப்போதுமே உலமாக்கள் விடையத்தில் ( அவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக, எந்த வகையான ஆடை அணிபவர்களாக, எவ்வாறான தோற்றமுடையவர்களாக இருப்பினும் உலமாக்கள் விடையத்தில் ) அள்ளாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவர்கள் நபித்துவத்தின் (வஹியின்) அறிவை சுமந்திருக்கின்றார்கள். 

இப்படிக்கு 
அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர். 

15 கருத்துரைகள்:

Dear Sheikh Hafiq, Well explain article and we hope this will change this person attitudes and avoid asking such question against the Moulavi

assalamu alaikum..dear all ..Rizwe mufthi Fathwa is Haram.jumma Bayan senji panam or kasu or salli vanguwathu Haram.Kandy markas la Mufthi Sab Mimberla sonnanga.
i am shaheebdeen from kandy.mobile number..072 9969 659 any inquiries call me pls

இன்று சில முப்திகள் ஹதியாவாக பல ஆயிரங்கள் பெறுகிறார்கள்.

இந்த விடயத்தைக்கூற இவ்வளவு விளக்கம் அவசியமில்லை. யாரும் விளங்கிக் கொள்ள முடிந்த ஒருவிசயம் தான் இது. இன்று சமூகத்தில் மக்களை குறிப்பாக உலமாக்களை மார்க்க விடயங்களைப் பேசுபவர்களைக் கேவலப்படுத்தும் ஒரு அபாயம் பரவுகிறது. அந்த தலைப்பில் கருத்துக்கள் விரிவாக கலந்துரையாடியிருக்கலாம்.

Do not give any amount for Jummua Khutba. Give good salary and other benefits for all ulamas. Then only they can give the good service for us. if not how they live with high living cost

Wa Alaikkum Assalam Mr Shaheebdeen or Miss/Mrs Silmiya Shaheebdeen,
I am the person who wrote the article. Imaam Bukhari has brought a heading & mentioned clearly under a Hadees that the Hadiyaa is for the Imamath & speech is permissible. . I have a deep relationship with Rizvi Mufthi Saab. I am sure that no any chance that Mufthi Saab might have given a Fatwa that the Hadiyaa for Khuthba is Haraam. I think you may have gone wrong in understanding.

Please ask Rizvi Muffthi & conform once more. If you need I am able to give you his personal contact number as well.

JazakAllah.

Wa Alaikkum Assalam Mr Shaheebdeen or Miss/Mrs Silmiya Shaheebdeen,
I am the person who wrote the article. Imaam Bukhari has brought a heading & mentioned clearly under a Hadees that the Hadiyaa is for the Imamath & speech is permissible. . I have a deep relationship with Rizvi Mufthi Saab. I am sure that no any chance that Mufthi Saab might have given a Fatwa that the Hadiyaa for Khuthba is Haraam. I think you may have gone wrong in understanding.

Please ask Rizvi Muffthi & conform once more. If you need I am able to give you his personal contact number as well.

JazakAllah.

Brother Azeez ,

Yes good idea. That is the solution we all are continually & trying to explain for the manegments of the Madressas & Masaajds . The same time what is the solution for those Imams & Ulamaas who are visiting for the Khuthba from far away spending their own money ???

Brother Azeez Riyas,

Yes good idea. That is the solution we all are continually & trying to explain for the manegments of the Madressas & Masaajds . The same time what is the solution for those Imams & Ulamaas who are visiting for the Khuthba from far away spending their own money ???

மார்கம் சொல்லித்தரும் நபர்களே,நல்லதை சொல்லிதர பணம் எடுத்தால் எப்படி,அல்லஹ் விட்க்காக மட்டுமே செய்யுங்கள்.

Hit the nail on the head. Our respected Ulama n Shaikhs r same like us with so much burdens deserving due respect n dignity. They should b looked after well.
Y certain halfbaked guys worried about this petty payments? These guys not worried about million Rs on extravagence on wedding yhamadha
.Jazkhr Shaik Shafeek.

What on earth going on? what is wrong with Muslim people today: Muslim Ulama are not respected well in the world today. So sad their condition is? Look how our community is treating them. what could Muslim community should do for them? Ulama could take some mosques management into labour tribunals if they know the employment laws.. Some Ulama have been working in mosques without any legal rights. It is duty of mosques that they should pay EPF to each Immam. But the problem is that Imams do not know Employment laws. They must take a employment letter from mosques when they are employed. Mosques must give them a letter of employment by law. This is a employment contract between Imams and mosques. had they been given this letters Imams could go to court for any dispute about payment.. This cash in hand disgrace would not come ups at all. Imams could work with respect if they had this contract agreements. Sri Lankan muslim community have hundreds of lawyers and yet, No lawyers come forward to talk about this.. why is they are silent on this. they care only about their pockets not the pockets of Imams. so, it is basic employment law issue than this so called cash in hand issue.

Dear Sheikh Towards Paradise kindly send the number I will ask again and reconfirm first then let u know pls

வருகைதரும் கொத்பா ஓதுபவர்களுக்குக் கொடுக்கும் இந்த அற்பப் பணம் எந்தவகையிலும் மார்க்கத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கு கொடுக்கப்படும் பணமாகக் கருதமுடியாது. ஆனால் முக்கிய அம்சம் என்னவென்றால், வௌியில் இருந்து ஏன் பள்ளிகளுக்கு இவ்வாறு கொத்பா ஓத பெரும்பாலும் வாலிப வயதுள்ள அனுபத்தில் மிகவும் குறைந்த, தொண்டைகிழிய கத்தும் அதே நேரம் அரபு எப்படிப் போனாலும் தமிழ் மொழி வாசனை தெரியாதவர்களை ஏன் பெரும்பாலான பள்ளிகளில் அழைத்து குத்பா ஓதுவது ஒரு பெஷனாகிவிட்டது. அவர்கள் ஓதும் குத்பாவுக்கும் அவ்வப்போது ஊரின் அவசியத் தேவைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எனவே பள்ளிகளை நிர்வாகம் செய்பவர்கள் இதுபற்றி அவர்களுக்கு விளங்காவிட்டால், உரியவர்களிடம் ஆலோசனை கேட்டு முதலில் ஊரில் உள்ள படித்த உலமாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் கொத்பாக்களை நடாத்த ஊக்குவிக்க வேண்டும். வௌியில் இருந்து கதீப்களை தற்காலிக இறக்குமதியை உடன்நிறுத்த வேண்டும்

Post a Comment