Header Ads



தென்கிழக்குப் பல்கலையில், புதிய மாணவர்கள் இணையும் நிகழ்வு


2016/2017 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கலகங்களுக்குத் தெரிவாநோரில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி பெற்ற மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு 2018-01-08 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்துள்ள விஞ்ஞான பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் கலந்துகொண்டார்.
உயிரியல் பிரிவுக்கு 150 மாணவர்களும் பௌதீக பிரிவுக்கு 115 மாணவர்களும் அனுமதி பெற்றிருந்தனர்.

இங்கு பிரதான உரையாற்றிய உபவேந்தர் நாஜீம், 


லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்தர பரிட்சை எழுதுகின்ற போதிலும் குறைவானவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவதாகவும் அவ்வாறு தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு  அரசாங்கம் மில்லியன்கணக்கில் செலவிடுவதாகவும் மக்களின் வரிப்பணத்தில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள் கல்வி என்ற இலக்கை அடைந்துகொள்வதற்காய் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

சிரேஷ்ட மாணவர்களில் சிலர் கனிஷ்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த முனைவதாகவும் அவர்களது விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பகிடிவதை விடயத்தில் அரசு மிகுந்த இறுக்கமான தண்டனைகளை அறிமுகம் செய்துள்ளதாகவும் அவ்வாறானவர்களின் வலையில் விழுந்துவிடாது தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர், நூலகர், மற்றும் திணைக்களங்களின் துறைத் தலைவர்களான ஏ.நசீர் அஹ்மட், எம்.எப்.நவாஸ், கலாநிதி கோமதிராஜ் ஆகியோர்களும்  சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் உள்ளிட்டவர்களும் உதவிப்பதிவாளர்,விரிவுரையாளர் கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments

Powered by Blogger.