Header Ads



கட்டாரின் மூலோபாய, நாடாக இலங்கை


இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையில் 73 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மொத்த வர்த்தகம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தூதரகத்தினால் கட்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில், கட்டார் நாட்டின் உயர்மட்ட வியாபாரத்துரை நிபுணர் Mohamed bin Towar al-Kuwari இதனைத் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் இலங்கை கட்டாரின் சிறந்த மூலோபாய நாடாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு பொருளாதார புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தாலும், இரு நாடுகளும் தமது வல்லமைகளை முழுமையாக பயன்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார் தெற்காசிய வலய நாடுகளுடன் பொருளாதார ரீதியான தொடர்புகளை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும், எதிர்க்காலத்தில் இந்த வலயத்தில் முதலீடுகளை அதிகரிக்கவுள்ளதாகவும் Mohamed bin Towar al-Kuwari குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Thanks to Qatar... I hope this will be a great help for Lankan government and its people. Further... Racist will keep down by this kind of relationship by Muslims lands with Our land.

    ReplyDelete

Powered by Blogger.