Header Ads



ஈமானை விடக் கூடாது (இங்கிலாந்து வீரர்களின் முன்னுதாரணம்)


இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்று சாம்பியன் கோப்பையை பெற்றது.

அந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து கிரிகெட் வீரர்களான மொய்ன் அலி மற்றும் அடில் ரஷீத் ஆகிய இருவரும் சாம்பியன் கோப்பையை பெறும் மேடையிலிருந்து கீழேயிறங்கி ஓரத்தில் ஒதுங்கினர்.

காரணம் பொதுவாக வெற்றி கிண்ணத்தை பெறும் போது பீர் குலுக்கி வெற்றியை கொண்டாடுவார்கள் அதே போல இங்கிலாந்து வீரர்களும் கொண்டாடும் போது அந்த மது தங்கள் மீது படக்கூட செய்யக்கூடாது என்ற வகையில் மேடையிலிருந்து வெளியேறி தள்ளி நின்றார்கள்.

மது குடிப்பது தான் ஹராம் ஆனால் அந்த மது தங்களின் உடலில் கூட தெறிக்க கூடாது என்று ஒதுங்கி காட்டியது அவர்களின் ஈமானின் பேணுதலை காட்டுகிறது.

மாஷா அல்லாஹ்

நாம் எந்த நிலைக்கு ஏறினாலும் எந்த நிலையிலிருந்து இறங்கினாலும் நமது ஈமானையும் அதன் ரோஷத்தையும் விட்டுவிலகிவிட கூடாது.


1 comment:

Powered by Blogger.