Header Ads



மத்திய வங்கி மோசடி - சம்பந்தனும் வாய் திறந்தார்

சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் விற்பனை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகார பீடங்களுக்கு அனுப்பி துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொதுசொத்துக்கள் துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சம்பந்தன் உண்மையின் பக்கமே கூட்டமைப்பு இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இலங்கை மத்தியவங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து ஆணைக்குழவின் பரிந்துரைகளை கவனத்திற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிஹேன மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அனைவருக்கும் எதிராக குற்றவியல் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளமைக்கு இணங்க நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளேன் என்று அறிவித்துள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.