Header Ads



"தனியொரு குடும்பத்தினால் மீண்டும், அரசாங்கத்தை அமைக்க இடமளிக்கப்போவதில்லை”

“தேசிய அரசியல் நோக்கமும் நாட்டின் எதிர்காலத் திட்டமும் கொள்கைகளும் அற்ற கட்சி ஒன்றைத் தாபித்து தனியொரு குடும்பத்தினால் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை” என ஜனாதிபதி தெரிவித்தார். 

கட்டுநாயக்கவில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“ஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சி என்பனவற்றாலேயே 2015 ஜனவரி 08 ஆம் திகதி அந்த அரசை மக்கள் நிராகரித்தனர். மீண்டும் அவர்கள் குடும்ப ஆட்சியையும் ஏகாதிபத்தியத்தையும் ஏற்படுத்த முடியாது. 

“அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பின்னால் இருக்க, ஒரே மேசையில் அமர்ந்து ராஜபக்ச குடும்பத்தினர் அரசாங்கத்தின் கொள்கைகள், பொருளாதார முகாமைத்துவம் மற்றும் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது.”

இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

1 comment:

  1. It is nice to hear,,, BUT create a Mechanism in the constitution which will stop too many major position going to one family. This will benefit our future generation of this sweet land.

    ReplyDelete

Powered by Blogger.