Header Ads



'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' - பராளுமன்றில் சர்ச்சை


மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கையில் 6000 இற்கும் மேற்­பட்ட பக்­கங் கள் இருப்­ப­தாக ஜனா­தி­பதி பொதுக் கூட்­ட­மொன்றில் கூறி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் பாரா­ளு­மன்­றத்­திற்கு பூர­ண­மான அறிக்­கை­யொன்று கிடைக்­க­வில்லை. இதனால்  ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொய்­யு­ரைத்­துள்ளார் என்று  நேற்று  கூட்டு எதி­ரணி மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் சபையின் அவ­தா­னத்­திற்கு கொண்டு வந்­த­மை­யினால் நேற்று ஆளும் ,எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு இடையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது.

இந்த விடயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் செய­லா­ளரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அழைத்து விசா­ரிக்க வேண்டும் என எதிர்க்­கட்­சி­யினர் கோரிக்கை விடுத்­தனர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று பந்­துல குண­வர்தன் எம்.பி எழுப்­பிய ஒழுங்கு பிரச்­சி­னையை அடுத்தே சபையில் இந்த சர்ச்சை ஏற்­பட்­டது.  இதன்­போது பந்­துல குண­வர்­தன எம்.பி கூறு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கிடைக்­க­பெற்­றது. எனினும் இந்த அறிக்கை பூர­ண­மா­னதா என நேற்று (நேற்று முன் தினம்) சபையில் விவா­திக்­கப்­பட்­டது. எனினும் நேற்று (நேற்று முன் தினம்) பொதுக் கூட்­ட­மொன்றில் கலந்து கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை 6000 பக்­கங்­க­ளையும் விட அதி­க­மா­னது என கூறி­யி­ருந்தார். எனினும் எமக்கு பூர­ண­மான அறிக்­கை­யொன்று கிடைக்­க­வில்லை. அப்­படி இருக்கும் போது எப்­படி நாம் விவாதம் செய்­வது என்றார்.

இத­னை­ய­டுத்து எழுந்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல,

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பாக ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்த அறிக்­கையை ஏற்க வேண்டும். இந்த அறிக்­கையில் பக்கம் குறை­வாக உள்­ளது என எதி­ர­ணி­யினர் கூறினால் விவாதம் கிடை­யாது என்றார்.

இதன்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறு­கையில்,

ஜனா­தி­பதி செய­லாளர் தனக்கு அனுப்­பிய அறிக்­க‍­யையே நான் பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்தேன். எனினும் பூரண அறிக்­கையை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் நான் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரிடம் வின­வினேன். சட்­டமா அதி­பரின் யோச­னையின் பிர­காரம் தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் மிகுதி தொகுதி தற்­போது அச்­சி­டப்­பட்டு வரு­வ­தனால் விரைவில் சமர்ப்­பித்­தாக ஜனா­தி­பதி செய­லாளர் தனக்கு அறி­வித்­துள்ளார். ஆகவே குறித்த அறிக்கை எமக்கு விரைவில் கிடைக்­க­பெறும் என்றார்.

இத­னை­ய­டுத்து எழுந்து பேசிய அநுர குமார திஸ­நா­யக்க எம்.பி,

இந்த விவ­காரம் தொடர்பில் நேற்று (நேற்று முன் தினம்) நாம் விவாதம் செய்தோம். அப்­போது பாரா­ளு­மன்­றத்தில் நேற்று (நேற்று முன் தினம்) முன்­வைக்­கப்­பட்ட அறிக்­கைக்கு மேல­தி­க­மாக ஏதும் இருந்தால் ஜனா­தி­பதி செய­லா­ளரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அழைத்து வந்து விசா­ரிக்க வேண்டும் என நான் கூறி­யி­ருந்தேன். இந்­நி­லையில் தற்­போது ஜனா­தி­பதி செய­லாளர் தனது பொறுப்பை மீறி செயற்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு பொய்­யு­ரைத்­துள்ளார். இது முற்­றிலும் தவ­றாகும். ஆகவே பாரா­ளு­மன்­றத்­திற்கு பொய்­யு­ரைத்­தமை தொடர்பில் ஜனா­தி­பதி செய­லா­ளரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அழைத்து விசா­ரிக்க வேண்டும். இதன்­படி ஜனா­தி­பதி  ஆணைக்­கு­ழுவின் பூரண அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்க வேண்டும். இது தொடர்­பாக கேட்­ட­றிய ஜனா­தி­பதி செய­லா­ளரை அழைத்து விசா­ரிக்க  சபா­நா­ய­க­ருக்கு அதி­காரம் உள்­ளது . ஒரு நாளில் இதுதான் பூரண அறிக்கை என்றும் அடுத்த நாளில் இந்த அறிக்­கையில் மேலும் மிகுதி உள்­ளது என எப்­படி ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் கூற முடி­யாது என்றார். 

இத­னை­ய­டுத்து எழுந்த தினேஷ் குண­வர்­தன எம்.பி,

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான அறிக்­கையில் 6000 பக்­கங்கள் இருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் எமக்கு தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையில் 6000 பக்­கங்கள் கிடை­யாது. ஆகவே ஜனா­தி­பதி செய­லாளர் எமக்கு பதி­ல­ளிக்க வேண்டும் என்றார்.

பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னர் தகவல் அறியும் சட்­டத்தை பிர­யோகம் செய்து ஒருவர் குறித்த அறிக்­கையை பெற்­றுள்­ள­தாக ஊட­கங்­களின் ஊடாக கூறி­யுள்ளார். இதன் நியாயம் என்ன? என்று பந்­துல குண­வர்­தன கேள்வி எழுப்­பினார்.

இதன்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பதி­ல­ளிக்கும் போது,

பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் யாருக்கும் குறித்த அறிக்கை வழங்­கப்­ப­ட­வில்லை என்றார்.

இதன்­போது அமைச்சர் மஹிந்த  அம­ர­வீர கூறு­கையில்

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் பக்கம் குறை­வான விடயம் ஊட­கங்­களில் வேறு விட­ய­மாக செல்ல கூடும். எனினும் இந்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரையோ அல்­லது ஏனைய அதிகாரிகளையோ பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு நாம் தயாராக உள்ளோம். எனினும் இந்த அறிக்கையில் சில விடயங்களை வெளியிட்டால் அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும என்பதன் காரணமாகவே சில விடயங்களை ஜனாதிபதி வெளியிடவில்லை. எனினும் பாராளுமன்றத்திற்கு குறித்த பூரண அறிக்கையை நாம் வெளியிடுவோம்.  பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அறிக்கை வழங்கவில்லை. அது முற்றிலும் தவறான கருத்தாகும் என்றார். 

No comments

Powered by Blogger.