Header Ads



நம்பமுடியாத குளிர், இப்படியும் ஓர் சூழல்


சைபீரியாவின் தொலைதூர ஒய்மியாகோன் கிராமத்தில் நம்ப முடியாத அளவுக்கு தட்பவெப்பநிலை மைனஸ் 62 பாகை செல்சியஸாக குறைந்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த நிரந்தரமாக மக்கள் வசிக்கும் இந்த கிராமம் உலகின் அதிக குளிர் கொண்ட கிராமம் என நம்பப்படுகிறது. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட டிஜிடல் வெப்பமானி கடும் குளிரால் உடைந்திருப்பது பற்றி அங்கு செல்வோர் விபரித்துள்ளனர்.

சுமார் 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் கடும் குளிருக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்வை நடத்துகின்றனர். எனினும் பேனாவில் உள்ள மை, வாகனங்களில் உள்ள பெட்ரோல் உட்பட அனைத்தும் உறைந்துவிட்டன. வீட்டை விட்டு வெளியே வந்தால் இமைகளில் கூடப் பனிப் படர்ந்துவிடுவதாக அந்த கிராமத்துக்கு சென்றவர்கள் விபரித்துள்ளனர்.

1933ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்போதுதான் இப்படி ஓர் உறைபனிச் சூழலை மக்கள் சந்தித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.