Header Ads



மரிக்காரை ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர, ஏற்பாடு செய்துள்ள ரணில்


ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தான் மரிக்கார் எம்.பி.யை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று மன்னிப்புக் கோருவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதாகவும் பிரதமர் இக்கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஐ.தே.க.யினால் பிற்பொக்கட் அடிக்கப்பட்ட ஒருவர் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரிக்கார் எம்.பி.பொதுக் கூட்டமொன்றில் கூறியிருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இதனாலேயே இது குறித்த சர்ச்சை எழுந்திருந்தது.

எதிர்காலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்து எந்தவிதமான சர்ச்சைக்குரிய கருத்தையும் வெளியிட வேண்டாம் என, ஐ.தே.க. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஸ்ரீல.சு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுடன் ஏதேனும் சர்ச்சைகள் இருந்தால் நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ள மரிக்கார் எம்.பி.,

“ தாம் கூறிய கூற்று தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது தவறாக எடுத்துச்சொல்லவோ பட்டுள்ளது என்றும், தாம் ஜனாதிபதியை ஒருபோதும் ‘பிக்பொக்கெட் ஜனாதிபதி’ என்று தெரிவிக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து மைத்ரிபால சிறிசேனவை ஐ.தே.க. பிக்பொக்கெட் அடித்ததாகவே தாம் கூறியதாகவும்”  குறிப்பிட்டுள்ளார்.

-DC-

3 comments:

  1. கௌரவ மரிக்கார் அவர்களே!

    அரசியலில் நிதானம் முக்கியம். நீங்கள் நேற்று பேயிந்த மழைக்கு முளைத்த காளான்போல். அவசரப்படவேனம்.பிரதமரிடம் இடம்பிடிப்பதுக்காக வாய்க்குவந்தமாதிரியெல்லாம் பேசவானம். உங்களைவிட மூத்த அரசியல்வாதிகள் எத்தனையோபேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாத ரகசியத்தையா நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்? அவசரப்படாமல் நல்ல நிதானத்துடன் உங்கள் அரசியலை தொடருங்கள் அப்போதுதான் நீங்கள் ஒரு சிறந்த அரசியல் வரலாற்றை ஏட்படுத்தமுடியும். ஏனனில் உங்களைப்போன்ற இளம் அரசியல்வாதிகள் எங்களது நாட்டுக்கு, எங்களது சமூகத்திற்கு அத்தியாசியமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சகாலத்தில் எங்கள் சமூக அரசியல் ஞானிகளை அடித்து துரத்தவேண்டிய காலம் வெகு தொலைவிலில்லை. Please don not Get Angry for my Small Advice.

    ReplyDelete
  2. So..."Inshaallah"...you want to act for Mahinda?

    ReplyDelete
  3. Bro.Noor Nizam, what you are trying to convey to muslims. These Rascal mean who are there? and what should know the muslim community at present? what ever it is tell openly, nothing to be wait for until future. we are muslim community is ready to readout your entire comments as you are the convener of the Muslim Voice. who are the new faces to be come forward?

    ReplyDelete

Powered by Blogger.