Header Ads



அரியவகை இறால், இலங்கையில் கண்டுபிடிப்பு


இலங்கையில் மிகவும் அரிய வகை இறால் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில் இறால் கிடைத்துள்ளதாக, தேசிய நீரியியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி மீனவர்களால் இறால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த இறாலை நாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக நிறுவனத்தின் ஆய்வாளர் உப்புல் லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த இறால் தெற்காசிய கடலில் அரிய வகையில் கிடைக்கும் எனவும் இவை அழிந்து வரும் உயிரினமாக உள்ளதெனவும் உப்புல் தெரிவித்துள்ளார்.

கடல் அலையில் சிக்கிய நிலையில் இறால் இலங்கை கடற்பரப்பிற்கு வந்திருக்கலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

28 வருடங்களின் பின்னர் இறால் பிடிக்க சென்ற சந்தர்ப்பத்தில் அரிய வகை இறால் சிக்கியதாக சித்தன புஷ்ப குமார என்பவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.