Header Ads



கமிஷன்களுக்காக மக்களை, ஏமாற்றுவது நயவஞ்சகத்தனமாகும் - சிராஜ் மஷ்ஹுர்

அக்கரைப்பற்றில் அடிக்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் இல்லாததன் காரணமாகவே, சில பிரதேசங்களில் வெள்ளங்கள் ஏற்பட்டு மக்கள் பெரும் தொலைக்கு உள்ளாகும் நிலை காணப்பட்டது. நமது நகருக்கான ஒரு சிறந்த முழுமையான திட்டம் (மாஸ்டர் ப்ளேன்) தேவைப்படுகின்றது என NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹுர் தெரிவித்தார்.

நேற்று (7) அக்கரைப்பற்றில் நடைபெற்ற NFGGயின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர்:

அக்கரைப்பறில் மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் தனியாகவும், பிரதேச செயலகத்தின் வேலைத் திட்டங்கள் தனியாகவும் நடைபெறுகின்றன. இவற்றுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். நமது நகருக்கான ஒரு சிறந்த திட்டம் (மாஸ்டர் ப்ளேன்) தேவைப்படுகின்றது.

நான் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான ஆசிய நிறுவனத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான பயிற்சியைப் பெற்றிருக்கின்றேன். வெள்ளத்தின்போதான பாதுகாப்பு குறித்து பங்களாதேசில் நேரடியாக களத்தில் சென்று அவதானித்திருக்கின்றேன். இந்தப் பின்னணியிலிருந்து ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகின்றேன்.

அதாவது, ஊரின் அபிவிருத்தி குறித்துப் பேசுகின்றவர்களுக்கு நான் ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். ஏன் இந்த நகரின் அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய விடயமான வடிகாண் அமைப்பை முறையாகச் செய்யாமலிருக்கின்றீர்கள்?.மக் களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், முதலில் செய்யப்பட வேண்டிய பல விடயங்களில் இதுவும் ஒன்று.

எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தாலும், அது சுற்றுச் சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும். இது உலக வழமையாக உள்ளது. ஆனால், எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் எந்தவொரு நியமங்களையும் பின்பற்றாது, கமிஷன்களைப் பெறும் திரு. 10சதவீதங்களாகவே எல்லோரும் உள்ளனர்.

ஒலுவில் துறைமுகத்தை அமைக்கும்போது, இந்த சுற்றுச் சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த பகுப்பாய்வுகளை ஓரம்தள்ளிவிட்டுத்தான் துறைமுகம் அமைக்கப்பட்டது. எனவேதான், இப்போது ஒலுவில் கடற் கரையோரம் கரைந்து, நிலத்தை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது. இதன் தாக்கம் திருகோணமலை வரை நீளும் என்று இது குறித்த ஆராய்ச்சியில் ஒரு ஆய்வாளர் கூறினார்.

இப்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எந்தவொரு நியமங்களையும் பின்பற்றாது, கமிஷன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. முன்பெல்லாம் ஊழல், மோசடி என்பன அபிவிருத்தித் திட்டங்களின் பக்க விளைவுகளாக இருந்தன. ஆனால், இன்று ஊழல், மோசடி, கமிஷன்களுக்காகவே அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற துரதிஷ்டமான நிலை நிலவுகின்றது. இப்படி ஊழல், மோசடி, கமிஷன்களுக்காக அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது மக்களை ஏமாற்றும், நயவஞ்சகத்தனமாக வேலையாகும். – என்று தெரிவித்தார்.

2 comments:

  1. சகோதரர்சிறாஜ் மசூர் அவர்களே நீங்களெல்லாம் வெறும் theory man ஆக இருக்க வேண்டாம் .யாரோ சொன்னதை, கேட்டதை வைத்துக்கொண்டு அபிவிருத்தி
    திட்டங்கள்பற்றி விமர்சிக்க தேவையில்லை. அதில் உள்ள கஷ்டங்கள் பொறுப்புக்கள் நெளிவு சுளிவுகள் என்பன அதில் உள் நுழைந்தவனால்தான் உணரமுடியும்.பயற்சிகள் மட்டும்
    பெற்றால் மட்டும் தனது கடமை முடிந்ததாக கொள்ளமுடியாது.அதை
    நடைமுறையில் செய்து காட்டவேண்டும்.இது விடயத்தில்
    உங்களுக்குள்ள practical knowledge
    காணாது அல்லது தெரியாது என்று
    நினைக்கிறேன். எந்த விடயத்திலும்
    அது பற்றிய செய்முைறை அனுபவம் இருக் வேண்டும்.அதன் பிறகுதான் அதுபற்றிய விமர்சனத்துக்குரிய தகுதி கிடைக்கும் அதிலும்
    அரச அபிவிருத்தி திட்டங்கள் என்றால்
    சொல்லதேவையில்லை. அக்கரைப்பற்றினுடைய அபிவிருத்தி
    திட்டங்களோடு கடந்த பதின்ஐந்து வருடங்களாக பின்னிப் பிணைநதவன்
    நான் அக்கரைப்பற்றினுடைய அபிவிருத்தி திட்டங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. குறிப்பாக வடிகான் வேலைகள் அப்படியே கிடக்கின்றன. சிறு வீதிகளின் வடிகான்கள் பெரிய வீதிகளின் வடிகான்களோடு இணைக்கபடவில்லை அதற்கிடயில்
    ஆட்சிமாற்றமும் அதிகாரமாற்றமும்
    கைமாறிவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் இவ் அபிவிருத்தி வேலைகள் முற்றுப் பெற்றிருக்கும்.ஆனால் சில
    வீதிகளில் உள்ள பொதுமக்கள் இதற்கு ஒத்துழைத்திருக்க வேண்டும் .அவர்கள் ஒத்துழைக்கவில்லை .எமது அமைச்சரையோ அலலது யாரையுமே குறை சொல்ல முடியாது.அதாவுல்லா அவர்கள் தன்னால் முடியுமானவரை இந்தஊரை அபிவிருத்தி திட்டங்களினால் அழகுபடுத்தியுள்ளார்.
    முன்னாள் பிரதேச சபை தலைவைர் தவம் அவரகளையயும் ,ஏன் முன்னாள் மேயர் ,தம்பி ஸகி அவர்களையும் இது
    விடயங்களில் குறைத்து மதிப்பிடமுடியாது .அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் போது சாத்திய வள ஆய்வு பற்றி கதைப்பதற்கு அல்லது அதுபற்றிய ஆய்வை மேற்கொண்டு அறிக்கை தயாரிப்பதெல்லாம் சுவாரஸ்யமானது
    ஆனால் நடைமுறையில் இதை முளுமையாக பிரயோகிப்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் இவ் ஆய்வு அனேகமாக இயற்கை சூழலை
    மையப் படுத்தியதாகும் . அத்தோடு தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்குக்கும் ,அரசியல் சூழ்நிலைகளுக்கும் உட்பட்டது.

    ReplyDelete
  2. மேலும் சமூகம்சார்ந்த விடயங்களும்
    இதில் உள் வாங்கப்படவேண்டும்
    எமது நாட்டிலே மிகப்பாரிய அபிவிருத்தி திட்டங்களில்
    கூட இந்த சாத்திய வளஆய்வுகள் கவனிக்கபடுவதில்லை.அல்லது
    அதன் பரிந்துரைகள் புறக்கணிக்க
    பட்டிருக்கும் . எனவே இதில் அக்கரைப்பற்றினுடைய அபிவிருத்திகள் பற்றி நாம் என்ன கணிப்பது .கொமிசன் பற்றி குறிப்பிட்டருந்தீர்ககள் .இலங்கையினுடைய அபிவிருத்தி திட்டங்களும், விலை
    மனு கோரிக்கைகளும் எப்போது ஆரம்பிக்க பட்டதோ அப்போதிருந்தே
    இந்த கொமிசன் விளையாட்டுக்களும்
    ஆரம்பிக்கபட்டுள்ளன .இதற்கான
    கொந்தராத்து நடைமறைகள் அதற்குசாதகமாக இருக்கின்றதே அதற்கு காரணமாகும். அவைகளில் மாற்றம் கொண்டுவருவது
    கடினமான விடயமாகும். ஒருசந்தர்பத்தில் தேசிய
    கொள்கை திட்டமிடல் பணிப்பாளரோடு இது பற்றி கதைத்துள்ளோம். இம்முைறைமைை மாற்றப்படவேண்டுமானால் இந்தநாட்டிலே நன்குவடிவமைக்கப்பட்ட சங்கள்., அமைப்புக்கள் உருவாகி அதில் முளுக்க முளுக்க பொது நல மனப்பான்மை கொண்ட அங்கத்தவரகள் உள்வாங்கபடுவதுடன் அவ்வமைப்புக்களிடம் பாரிய பண இருப்புகளும் இருக்க வேண்டும். கிராமங்களில் அதனது சிறிய திட்டங்களுக்கேற்ப கிராம அபிவிருத்தி சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவர்களிடமும் இவ்வேலைகள் ஓப்படைக்கப்படுகின்ற நடைமுறை இன்றும் உள்ளது ஆனால் அங்கும் சரியான அங்கத்தவர்கள் உள்வாங்கப்படுவதில்லை அல்லது சமூக பொது நல மனப்பான்மை கொண்டவர்கள் இங்கு குறைவு எனறுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அதன் கூட்டங்களுக்கு எவ்வாறு அழைப்பு விடுத்தாலும் மக்கள் வருவதில்லை சிலபேர் வருவார்கள் அவர்களில் ஒரு சிலர் ஏதாவது அரசியல் கட்சி சாரந்தவராகவும்
    அந்த கட்சியின் நலனில் மட்டுமே அக்கறைபட்டவராகவும் இருப்பார்
    மற்றும் சிலர் தன்னுடைய நலனை மட்டும் உத்தேசித்து வருவார்கள். எமது
    ஊரில் ஒவ்வொரு கிராம சேவகர் பிருவுகளிலும் ஒவ்வொரு கிராம அபிவிருத்தி சங்கமும் ,மகளிர் கிராம அபிவிருத்தி சங்கமும் அமைக்கப்படணேண்டுமென சட்டம் சொல்கிறது அதன் பணிகளும் விசாலமானது. வேறு பிரதேசங்களில் இச்சங்கங்கள் சிறப்பாக இயங்கி மக்களுக்கு சிறந்த பணிகளை செய்துவருகின்றன. ஆனால்எமது பகுதியில் அவைகள் பூச்சியமே.படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் கூடுதலாக உள்ள எமதூரில் பொது விடயங்களில் கலந்து பொது மக்களுக்கு சேவை செய்வதற்கு முன்வருபவர்கள் குறைவு என்பது துர்பாகியமே. சில பொது அமைப்புக்கள் இயங்குகின்றனதான். அவைகள் பெயரளவிலும் ,மட்டுப்படுத்தப்பட்ட
    நடவடிக்கைகளிலும்தான் ஈடுபடுகின்றன.எனவே பொது மக்களும் பொது அமைப்புக்களும்
    விழிப்புணர்வோடு இருந்தால் எமதூரில் நாம் எதைதான் சாதிக்கமுடியாது?
    அன்று தொட்டு இன்றுவரை கொமிசன் வாங்குபவன் வாங்கிறதான், வாங்காதவன் தன்னை விலத்திக்கொண்டு போகவேண்டியதுதான். என்னூடைய
    அனுபவத்தில் இந்தகொமிசன் பெறாத
    நேர்மையான எத்தனையோஅதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் சந்தித்து இருக்கின்றேன். எந் அபிவிருத்தி
    திட்டங்கள நடைபெறும் போதும்
    மக்கள் அதில் விழிப்பாக இருக்க வேண்டும்.பொது மக்கள் குழுக்கள்
    விழிப்புணர்வோடு இருந்தால் எல்லா திட்டங்களிலும் வினைத்திறனான பலனை பெற்றுக்கொள்ளலாம். நமக்கேன் வீண்வம்பு என ஒதிங்கிக் கொள்வது ,பிறகு நாம் குற்றம்
    குறைகள் சொல்லுவது இதுதான் நமது
    வழமை இது மாற வேண்டும்.
    பொதுமக்கள் என்ற போர்வையில்
    ஒர் இருவர் கொந்தராத்ததுகாரர்களை மிரட்டி பணம் பறித்த சந்தர்பங்களும் உண்டு .எனவே
    சகோதரரே எல்லோரையும்போல் நீங்களும் இந்த வழமையான குற்றம் குறைகளை சொல்ல
    வேண்டாம்.உங்களையும் இந்த ஊரின்
    சொத்துக்களில் ஒன்று என கருதுகின்றோம்.இந்த ஊருக்கு நல்லது செய் முயற்சிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என எதிர்பார்கிறோம். உங்கள் அரசியல் பிரவேசத்தை பாராட்டுகின்றேன். எனவே
    உஙகள் கொள்கைகளையும் , உங்களுக்கு சந்தரப்பம் கிடைத்தால்
    அக்கரைப்பற்றிற்கும் இந்நாட்டிற்கும்.
    என்ன செய்ய உள்ளீர்கள் என்பதையும் உரத்துச் சொல்லுங்கள். உங்களையும் வாழ்த்துகின்றேன்.
    இது நீங்கள் Jaffna Muslim முக்கு எழுதியதிலுந்து.

    ReplyDelete

Powered by Blogger.