Header Ads



இராஜாங்க அமைச்சருக்கு காயம், வாகனம் சுக்குநூறாகியது


இராஜாங்க அமைச்சரான ஸ்ரீயானி விஜேவிக்ரம, பயணம் செய்த பென்ஸ்ரக வாகனம், ம​ரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காயமடைந்த அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென ​பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு-கண்டி வீதியில் கடுகண்ணாவ, ஹேனவல வளைவிலேயே இந்தச் சம்பவம், இன்றுக்காலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தில் இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடைய சாரதி ஆகியோரே பயணித்துள்ளனர். அவ்விருவருக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லையென பொ​லிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.