Header Ads



தகுதியிழந்த கோத்தா - எச்சூழ்நிலையிலும் அமெரிக்க குடியுரிமையை கைவிடேன் என அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தகுதியானவர் அல்ல என்று கூட்டு எதிரணியின்  தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

அவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அமெரிக்க குடியுரிமையைக் கைவிட வேண்டும்.

ஆனால், எந்தவொரு சூழ்நிலையிலும், அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடத் தாம் விரும்பவில்லை என்று அவர் ஏற்கனவே எம்மிடம் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று பொருத்தமான நேரத்தில் முடிவெடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. முற்றிலும் சரி. அமெரிக்ககுடியுரிமையைக் கைவிட்டால் இங்கிருந்து களவாடி அங்கே கொண்டு போய் ஔித்து வைத்துள்ள கோடான கோடி பணமும் சொத்துக்களையும் விட்டுக் கொடுக்க முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.