Header Ads

பள்ளிவாசல் பற்றி ஹக்கீம் சொன்னதை, மறுக்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மதஸ்தலத்தின் நிருவாகத்தையும் கலைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று, அதன் தலைவர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கெப்பிட்டல் எம்.எம். வானொலியின் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலைக்கப் போகின்றார் என்று, அண்மையில் இறக்காமத்தில் வைத்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில், கெப்பிட்டல் எப்.எம். வினவிய போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருதிலிருந்து போட்டியிடும் சுயேட்சைக் குழுவினர் வெற்றி பெற்றாலும், சபையில் அமர முடியாது என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் இறக்காமத்தில் தெரிவித்தமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிடுகையில்; “ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படும் எவரையும் தடுக்க முடியாது” என்றார்.

6 comments:

  1. இப்படித்தான் VC வென்றாலும் பாராளுமன்றம் போக முடியாது என்று அன்று கூறினார்,
    ஆனா ஒன்று மக்கள், நம் தலைவர் எது சொன்னாலும், செஞ்சாலும் செரியாத்தான் இருக்கும்.
    இது போன்ற செய்திகளை நம்பாது தலைவரது வாக்கை மாத்திரம் நம்பி அவரை நாம் பலப்படுத்த வேண்டும்.

    அந்நிய சக்திகளின் ஊடுருவலில் இருந்து எம் சமூகத்தை காக்கும் அரணாக எம் தலைவன் உள்ளான்,
    எனவே போராளிகளாகிய (என்னத்துக்கு போராடின எண்டு கேக்கப்போட...) நாம். துவண்டு விடாது எம் தலைவன் காட்டும் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிப்பதன் மூலம் நாம் ஈமான் உள்ள முஸ்லிம்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பித்தலாட்டக்காறர்களுக்கு தேர்தல்மூலம் தகுந்த பாடம் புகட்டுவோம்

      Delete
    2. பித்தலாட்டக்காறர்களுக்கு தேர்தல்மூலம் தகுந்த பாடம் புகட்டுவோம்

      Delete
  2. இப்படித்தான் வசி வென்றாலும் பாராளுமன்றம் போக முடியாது என்று அன்று கூறினார்,
    ஆனா ஒன்று மக்கள், நம் தலைவர் எது சொன்னாலும், செஞ்சாலும் செரியாத்தான் இருக்கும்.
    இது போன்ற செய்திகளை நம்பாது தலைவரது வாக்கை மாத்திரம் நம்பி அவரை நாம் பலப்படுத்த வேண்டும்.

    அந்நிய சக்திகளின் ஊடுருவலில் இருந்து எம் சமூகத்தை காக்கும் அரணாக எம் தலைவன் உள்ளான்,
    எனவே போராளிகளாகிய (என்னத்துக்கு போராடின எண்டு கேக்கப்போட...) நாம். துவண்டு விடாது எம் தலைவன் காட்டும் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிப்பதன் மூலம் நாம் ஈமான் உள்ள முஸ்லிம்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. ஹக்கீம் அவர்களே இப்ப விலங்கிடா?

    ReplyDelete
  4. அவரு யாரு, அரசியல் சாணக்கியம் தெரிஞ்சவருல.

    ReplyDelete

Powered by Blogger.