Header Ads



ஜெருசலத்தை பாலஸ்தீன தலைநகராக்கும், முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு


கிழக்கு ஜெருசலேம் நநகரை பாலஸ்தீனம் நாட்டின் தலைநகராக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. 

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஜெருசலேம் நகரின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பாக இஸ்ரேலிய தலைவர்களும், பாலஸ்தீன தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி திட்டத்துக்கான தூதர் நிக்கோலே மிலடெனோவ் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் நீடிக்காத வரையில் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார். பாலஸ்தீன நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் மாற்றப்படும். அங்கு எங்கள் நாட்டின் புதிய தூதரகம் திறக்கப்படும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பாலஸ்தீனத்தை ஐரோப்பிய யூனியன் ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும். இதன்மூலம் இஸ்ரேல் நாட்டுடனான அமைதி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகருக்கு சென்றிருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி ஃபெடெரிக்கா மோகேரினி-யை இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, கிழக்கு ஜெருசலேம் நகரை பாலஸ்தீனம் நாட்டின் தலைநகராக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு கொள்கை தலைமை இன்று ஆதரவு தெரிவித்துள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 comment:

Powered by Blogger.