Header Ads



ஹசன் அலி, ஜனாதிபதிக்கு ஆதரவு


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் ஹசன் அலி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த ஹசன் அலி ஊழல் மோசடிகளற்ற தூய்மையான அரசியல் இயக்கத்தினை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து செயற்பட தான் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். 

அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.அன்வர் ரமீஸ், சம்மாந்துறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இணை அமைப்பாளர் வை.எம்.முஸம்மில், தெஹிவலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் கீர்த்தி உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.01.18

1 comment:

  1. என்ன கொடுமடா இது இவ்வெளவு காலமும் சம்மாந்துறை யானைகளின் பாகனாக இருந்த ஹசனலியை உதைத்து தள்ளி விட்டதா யானைகள்.

    ReplyDelete

Powered by Blogger.