Header Ads



ஜனாதிபதியைச் சாடிய ரணில் - மகிந்தவின் குடியுரிமையைப் பாதுகாக்க, முயற்சி என தாக்குதல்

மகிந்த ராஜபக்சவை குடியுரிமை இழப்பில் இருந்து காப்பாற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சிப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொரவக்கவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“ மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த மோசடிகள், ஊழல்கள், அதிகார மீறல்கள், குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில், மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பரிந்துரை, ஏழு ஆண்டுகளுக்கல்ல, வாழ் நாள் முழுவதும் அவரது குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமை பறிக்கப்படும் விவகாரத்துக்கு தீர்வு காண அவர்கள் முனைகிறார்கள் என்று நினைக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.