Header Ads



சமல் ராஜபக்ஷவை பிரதமராக்க முயற்சித்தோம், மஹிந்தவே எதிர்த்தார்

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையை பெற்று உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்றும். அதன் பின்னர் தாமரை மொட்டில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களும் சு.கவுடன் இணைந்துக்கொள்வார்கள்.” என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

“பொது எதிரணியில் உள்ளவர்கள் எமது நண்பர்களே. அவர்களை சு.கவில் மீண்டும் இணைந்துகொள்ள அனைத்து பகைகளையும் மறந்து சுசில் பிரேமஜயந்த தலைமையில் பேச்சுகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், அவை தோல்வியிலேயே முடிந்தன. என்றாலும், தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சம்சமாஜ கட்சிகளின் பெரும்பாளான உறுப்பினர்கள் சு.கவுடன் இணைந்துக்கொண்டனர்.

தேர்தலுக்கு முன்னர் இன்னம் பலர் இணைந்துக்கொள்வார்கள். சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் பொதுஜன பெரமுனையில் இல்லை. அனைத்து சிரேஸ்ட உறுப்பினர்களும் சு.கவிலேயே உள்ளனர். அவர்களை சு.கவில் இணைத்துக்கொள்ள எதிர்காலத்திலும் பேச்சுகளை முன்னெடுப்போம்.

அதேபோல், உள்ளூராட்சித் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்கள் அனைவரும் சு.கவில் இணைந்துக்கொள்வார்கள். தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஒருந்து ஓய்வுபெறுவார்.

கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போனமையாலேயே ஐ.தே.கவுடன் ஆட்சியமைத்தோம். சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க பேச்சுகளை முன்னெடுத்தோம். அதற்கு மஹிந்த சம்மதம் தெரிவித்திருக்கவில்லை. அத்துடன், அத்தருணத்தில் ஐ.நா. அறிக்கையும் வந்துக்கொண்டிருந்தது. எவருக்கும் அரசை அமைக்க முடியாது போனமையால் தேசிய அரசை ஜனாதிபதி அமைத்தார். இன்று உலகை வெற்றிக்கொண்டுள்ளோம்.

புதிய தேர்தல் முறையை ஐ.தே.கவும் பொது எதிரணியும் எதிர்த்திருந்தது. ஆனால், நாங்கள் அதனையும் வெற்றிக்கொண்டோம். உள்ளூராட்சிமன்றத் தேர்ததில் அதிக பெரும்பான்மையை பெற்று உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். எமது கூட்டணியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 1994ஆம் ஆண்டுமுதல் பிரதான கட்சியாகவுள்ளது. வடக்கு, கிழக்கிலும் பலக் கட்சிகள் சு.கவின் கூட்டணியில் போட்டியிட்டுகின்றன என்றார்.

1 comment:

  1. இவர்களின் தோல்வி உறுதியானால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதைக்கிறார்கள்.. வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என்றும் அவ்வாறானவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஒருவர் கூற இவர் கூறுகிறார் அவர்களும் இவர்களின் நண்பன் என்று..

    ReplyDelete

Powered by Blogger.