Header Ads



உள் விஷயங்கள் ரிலீஸாகுமா..?

-S O-

பிணைமுறி விவகாரத்தின் முக்கிய புள்ளியான அர்ஜுன் அலோசியஸ் தன்னுடன் நெருக்கமாகச் செயற்பட்ட முக்கியமான அரசியல்வாதிகள் தொடர்பில் முழுமையான விபரங்களை வெளியிடத் தயாராகி வருகிறாராம். ஒரு காலத்தில் நெருக்கமாகச் செயற்பட்டு தற்போது ஓரங்கட்டி நிற்கும் பல அரசியல் புள்ளிகள் இதனால் கலக்கமடைந்துள்ளனராம்.

இப்படி விபரங்கள் வெளிவருவதைத் தடுக்க சில உயர்மட்ட பிரமுகர்கள் முயற்சிகளை எடுத்தாலும், அர்ஜுன் அலோசியஸ் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு முழு விபரங்களையும் சொல்லவுள்ளாராம். ஏற்கனவே நெருக்கமாக இருந்த புள்ளிகள் தமது இக்கட்டான காலகட்டத்தில் ஒளிந்து நின்றதால் தமது பக்கம் இருக்கும் முழு இரகசியங்களையும் போட்டுடைக்க அவர் தீர்மானித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் சொல்கின்றன.

No comments

Powered by Blogger.