Header Ads



மோசடியில் தினமும் சிக்கிக்கொள்ளும், இலங்கையர்களின் சோகக்கதை

இலங்கை மக்களை ஏமாற்றி இணைய மோசடி மூலம் பணம் பெற்றுக்கொள்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி மூலம் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளம் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரபல வர்த்தக நாமங்களை கொண்ட சர்வதேச நிறுவனங்களினால் நடத்தப்பட்ட போட்டியின் பின்னர் பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்து இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசினை இலங்கைக்கு அனுப்பி அதனை சுங்க பிரிவில் விடுவித்து கொள்வதற்கு தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறி பணம் மோசடி செய்யப்படுகின்றது.

இந்த மாப்பியா கும்பலின் பிரதானியாக பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஜோன் ஹெரி என்பவர் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடியில் தினமும் சிக்கிக்கொள்ளும் இலங்கையர்களின் சோகக்கதைகளை தான் கேட்பதாக சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குவைத்தில் பணிப்பெண்ணாக சேவை செய்த இலங்கை பெண் இந்த மோசடியில் சிக்கி நான்கரை லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ள சம்பவம் ஒன்றும் இதற்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் இது தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.