Header Ads



"இந்நாளை கறுப்பு ஜீலையாக எண்ணுகின்றோம்"

"நண்டை போல் அசிங்கத்தை தலையில் வைத்துக் கொண்டு நழுவி நழுவி செல்லும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊழல் செய்யப்பட்டுள்ளது என்று பிதப்புகிறார்." என மஹிந்த தலைமையிலான பொது எதிரணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட பொருப்பளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

லிந்துலை நாகசேனையில் இன்று -01- இடம்பெற்ற கட்சி காரியாலய திறப்பு விழாவின் போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"அமைச்சர் ராஜித மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த வேளையில் ஏழு, எட்டு கப்பல்களை வைத்துக்கொண்டு செயல்பட்ட இவர் யாருடைய பல்லை பிடிங்கி செயல்பட்டார் என நான் கேட்கின்றேன். அத்தோடு யாருடைய பல்லை பிடுங்க சென்றிருந்தார் என நான் கேட்க தயாராகவுள்ளேன்.

இவர் தொடர்பிலும் ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு கொடுக்கப்பட்ட புகாரை ஏன் இதுவரை காலமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவர் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகளும் கோப்புகள் ஊடாக பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏன் அது தொடர்பில் விசாரணை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் நாளை அல்லது நாளை மறுநாள் இதற்கான பிரச்சினை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.

தோழ்வி அடைவதற்காக நாம் தேர்தலில் போட்டியிடவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளிலும் வெற்றிப்பெற்றே தீர்வோம்.

ஜனவரி 8  நாட்டில் பொய், ஏமாற்றம் ஊழல் ஊடாக நாட்டின் மக்களை வளைத்து ஏமாற்றி ஆட்சி அமைத்த நாளாக இந்நாளை வர்ணிக்கின்றோம்.

தேசிய ரீதியிலான  அசாதாரண அபிவிருத்தி என பொய் வாக்குறுதி  வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்பட்ட இந்நாளை கறுப்பு ஜீலையாக நாம் எண்ணுகின்றோம்.

நீண்ட காலமாக பின்தள்ளப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு அரசாங்கத்துடன் போராடி நீதிமன்றம் சென்று சட்டவிதிகளை பாவித்தே தற்பொழுது தேர்தலை நடத்த நாம் முன்னோடியாக செயல்பட்டுள்ளோம்." என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.