Header Ads



'மைத்திரியின் வாள்வீச்சில், பெருந்தலைகள் சிக்கவில்லை'

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியே எடுத்த வாளை ஊழல்வாதிகளை சிறைக்குள் தள்ளும்வரை உள்ளே வைக்கக்கூடாது என்று இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நேற்றுமுன்தினம் வெளியிட்ட விசேட அறிவிப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் தலைவரான சிறிதுங்க ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

""ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாள்வீச்சில் பெருந்தலைகள் சிக்கவில்லை என்ற உணர்வு எமக்கிருக்கின்றது. இருந்தாலும், சிக்கியுள்ள குற்றவாளிகளின் தலையையாவது அவரின் வாள் சீவவேண்டும். எனவே, இது விடயத்தில் முன்வைத்த காலை அவர் பின்வைக்கக்கூடாது.

குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டாலும் தண்டனை வழங்கப்படும்வரை அவர் பிணை வழங்கக்கூடாது. அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்குரிய தேர்தல் ஆயுதமாகவும் மேற்படி அறிக்கையை ஜனாதிபதி பயன்படுத்தக்கூடாது. 

சட்டம் தன் கடமையை உரியவகையில் செய்வதற்குரிய தடைகளை அவர் தனது வாளில் வெட்டிக்கொடுக்கவேண்டும்'' என்றார்.

No comments

Powered by Blogger.