Header Ads



கோமாவில் உள்ளவர்களின் கவனத்திற்கு...!

-அப்துல் பாஸித்-

ஹக்கீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் கூட்டமைப்புக்கு இடையிலான விட்டுக்கொடுப்புக்கள் எதனை நோக்கி நகர்கின்றன என்பதை அலசும் ஒரு ஆய்வு இது.

அண்மை கால அரசியல் களம்களை உற்று நோக்குகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பானது  முஸ்லீம் காங்கிரஸிட்ட்கு பல வகையான விட்டுக்கொடுப்புகளை அல்லது உதவிகளை செய்து வருவதை வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. அவற்றில் எம் கண்ணுக்கெட்டிய சிலவற்றை பற்றி அலசுகிறோம்.

1.       கடந்த மாகாண சபை தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பிட்கு வழிவிட்டு எமது தேர்தல் பிச்சாரம்களை செய்கின்றோம் என சாணக்கியர் பகிரங்கமாகவே கூறித்திருந்தமை.

2.       தேர்தல் முடிந்த உடன் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் பெற்றிருந்த நிலையில், காங்கிரஸிட்கே முதலமைச்சு மற்றும் அவர்கள் விரும்பும் அனைத்து அமைச்சுக்களையும் தருகின்றோம் என அறைகூவல் விடுத்தது ஆட்சி அமைக்க கூறியமை.

3.       அதன் பின்பும் அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தமைக்கான காரணத்தை பிட்காலத்தில்  ஒரு ஊடகவியலாளர் ஹக்கீமிடம் கோரிய போது, நாம் அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்ததன் பின் தான் அரசு வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த முன் வந்தது அதன் மூலம் தான் கூட்டமைப்பு வடக்கில் ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை தெளிவு படுத்தியமை.

4.       2014 ஜனாதிபதி தேர்தலின் பின் கிழக்கு மாகாண சபையில் மு.கா. ஆட்சி அமைத்து சில நாட்களுக்குள் தனது அரசியல் எதிரிகளான ரிஷாத் மற்றும் அதாஉல்லா ஆகியோரின் கட்சி உறுப்பினர்களுடன் முரண்பட்டு தமது பெரும்பான்மை கேள்விக்குட்படுத்தப்பட்ட பொழுது, 11 உறுப்பினர்களுடன் இருந்த கூட்டமைப்பு முன்வந்து மு.கா. வை ஆதரித்தமை மற்றும் முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுத்தமை.

மேலுள்ள நிகழ்வுகளில் பின் இந்த லொள்ளாட்சியில் தான் வடகிழக்கு இணைப்பிட்கான கோஷம் தமிழர் தரப்பில் அதிகரித்து. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெளிவாக கூறி வருகின்றார் வடகிழக்கு இனைய வேண்டும் அதுவும் முஸ்லிம்களின் சம்மதத்துடன் இனைய வேண்டும் என்று. எந்தவொரு முஸ்லீம் பொதுமகனும் விஷேடமாக கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் வடகிழக்கு இணைவதை வன்மையாக எதிர்த்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் மிக காரசாரமாக அதனை வெளிப்படுத்துகின்றனர்.

முஸ்லிம்களின் நிலைப்பாட்டை  அறிந்த பின்னரும் சுமந்திரன் மீண்டும் மீண்டும் இவ்வாறே கதைத்து வருகின்றார், ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் ஒருவர் சுமந்திரனிடம் நீங்கள் முஸ்லிம்களிடம் இதுவிடயமாக பேசுகிண்றீர்களா என வினவிய பொழுது, முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற முஸ்லீம் காங்கிரஸிடம் நாம் பேசிவருகின்றோம் என பதிலளித்தார். ஆனால் என்ன பேசியிருக்கின்றோம் எவ்வாறான உடன்பாடுகள் காணாப்பட்டன என வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும் முஸ்லிம்களின் ஆதரவுடன் வடகிழக்கு இணையும் என்ற நம்பிக்கையுடன் சுமந்திரன் பேசிவருகின்றார். இங்கு இவர் முஸ்லிம்களின் ஆதரவு என்று கூறுவது முஸ்லீம் காங்கிரசின் ஆதரவைத்தான் என்பது தெளிவு. முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற கட்சியாக முஸ்லீம் காங்கிரஸ் (ஹக்கீம் காங்கிரஸ்) இருக்கும் பொழுது அக்கட்சியின் ஆதரவை பெற்றால் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவை பெற்றதாகிவிடும் என்பது தமிழ் கூட்டமைப்பின் கணக்கு. எனவேதான் முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற கட்சியாக தொடர்ந்து வைக்க வேண்டிய தேவை கூட்டமைப்பிட்கு உண்டு.
எதிர்வரும் உளூராட்சி தேர்தலிலும் கூட்டமைப்பானது, ஹக்கீம் காங்கிரசை வலிந்து வெல்ல வைக்க முயட்சிக்கும் சில களம்களை நாம் கண்டு கொண்டோம்.


1.       சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல்.
புதிய கலப்பு முறை தேர்தல் முறைமையில், சம்மாந்துறை பிரதேச சபையில் 2 அல்லது 3 ஆசனங்களை தமிழர்கள் தனதாக்கிக்கொள்ள முடியும். அதிஷ்ட வசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களது உள்நோக்கம் இங்கு புடம்போடப்படுகின்றது.

யானை (மு.கா.) மற்றும் மயில் சின்னங்களுக்கு இடையிலான போட்டியில், யானை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொண்டிருக்கின்றது தமிழ் கூட்டமைப்பு. இங்கு உற்று நோக்க வேண்டிய விடயம் என்னெவென்றால், 2ஆம்  வட்டாரமான வீரமுனை வட்டாரம் 3 உறுப்பினர்களை கொண்ட  கலப்பு  வட்டாரமாகும். 70% முஸ்லீம் வாக்குகளையும் 30% தமிழ் வாக்குகளையும் கொண்ட இந்த வட்டாரத்தில் யான சின்னம் (மு.கா.) 3 முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள அதே நேரம் மயில் (நாவ்ஷாட்) 2 முஸ்லீம் மற்றும் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. கூட்டமைப்பு போட்டியிடாத இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பிரதிநிதியை பெறக்கூடிய ஒரே தெரிவு மயில் சின்னம்தான். ஆனால் அதை தவிர்த்து 3 முஸ்லீம் வேட்பாளர்களை கொண்ட மு.கா வினுடைய யானை சின்னத்தை ஆதரிக்க கூட்டமைப்பு கூறுவதன் மர்மம் என்ன என்பதை போராளிகளே நன்கறிவர்.

2.       கல்முனை மாநகர சபை தேர்தல்

மு.கா. இன் கோட்டையாகிய கல்முனையில் இன்றய நிலை அரசியல்வாதிகளிட்கு ஒரு தெளிவான பாடம் புகட்டும் நிலைக்கு வந்துள்ளது. இப்பொழுது உள்ள கள நிலவரப்படி கல்முனைக்குடி மற்றும் மருதமுனை மக்களின் அதிகபட்ச ஆதரவை மு.கா. பெற்றாலும் கூட அவர்களால் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாத நிலைமை சாய்ந்தமருதில் ஏட்படுத்தப்பட்டுள்ளது. அதிகூடிய நிலையான 60% முஸ்லிம்களின் வாக்குகளை மு.கா. பெற்றாலும் அவர்களிட்கு கிடைக்கும் அதி உச்ச ஆசனம்கள் 14 மாத்திரமே, ஆனால் உண்மை நிலவரப்படி 12-14 என கூற முடியும். இந்த சந்தர்ப்பத்தில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டு வைக்க வேண்டும். மயில் கட்சி 6-7 ஆசனங்களை பெற முடியும். இருந்த போதிலும் கல்முனை ஆட்சியில் ஏனைய முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு வைக்க விரும்பாத ஹக்கீம், தனது மச்சான் முறை உறவான தமிழ் கூட்டமைப்புடன் கூட்டாட்சி அமைக்க திரை மறை ஒப்புதல் அளிக்க நன்றாகவே வாய்ப்புள்ளது.

தேர்தலுக்கு முன் இதை தெளிவு படுத்தினால் கல்முனைக்குடி மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிவரும் என்பதால் தனித்து ஆட்சி அமைப்போம் என்று வீர வசனம் பேசுவது அல்லாது, ஆட்சியில் தமிழ் கூட்டமைப்போடு பங்கு போடும் ஆபத்து கல்முனை மக்களுக்கு தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வாகும்.

உள்நோக்கம் எதுவுமில்லாது, அல்லது பிரதிபலன் எதையும் எதிர்பாராது (வட கிழக்கு இணைப்பு) அல்லது வெளிநாட்டு சக்திகளான டயஸ் போறா மற்றும் இந்தியாவின் ரோ போன்ற அமைப்புகளின்  வழிகாட்டுதல் இல்லாமல் வெறும் நல்லிணக்கத்திட்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஹக்கீம் காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்கின்றது என்றால், அதை ஹக்கீம் பக்தர்களாகிய போராளிகள் அல்லாது வேறு யாரும் நம்பத்தயாரில்லை.

No comments

Powered by Blogger.