Header Ads



சட்டமா அதிபருடன் ஜனாதிபதி, நாளை முக்கிய பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சட்டமா அதிபருக்குமிடையிலான தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

பிணைமுறி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் நேற்றுமுன்தினம் தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர். குறித்த அறிக்கையின் அடுத்தகட்ட சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவே இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடுத்தகட்ட செயற்பாடுகள் மற்றும் அறிக்கையை மக்களுக்கு பகிரங்கப்படுத்தல் தொடர்பான விடயங்களை உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

ஆனாலும் ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபருக்கிடையிலான சந்திப்பின் பின்னர் பிணைமுறி அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சட்டநடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் தீர்மானமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.