Header Ads



"திருடனின் தாயிடம், சாத்திரம் பார்த்த பிரதமர்"

மத்திய வங்கி முறி விவகாரத்துடன் ஐக்கிய தேசிய கட்சியினர் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டமை கேலிக்குரிய விடயம் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார். 

எவன்காட் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்தால் திலக்மாரப்பன யார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

ஐக்கிய தேசிய கட்சியினால் விசாரணை குழு நியமிக்கப்பட்டமையானது, திருடனின் தாயிடம் சாத்திரம் பார்ப்பதற்கு நிகரானது.

அர்ஜூன் அலோசியசின் சட்டதரணி, திலக்மாரப்பனவின் சகோதரர் என்பது இன்னும் நகைப்புக்குரிய விடயமாகும்.

இத்தகைய செயற்பாடானது ஐக்கிய தேசிய கட்சியினரை மேலும் அவமானத்திற்கு உட்படுத்துகிறது.

தம்மால் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதை பிரதமர் இரண்டு தடவைகள் ஏற்று கொண்டுள்ளார்.

இதனை அவரே உரையாடல்கள் மூலம் ஒப்பு கொண்டுள்ளார் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.