Header Ads



கத்தாரில் வசிக்கும் இலங்கை, முஸ்லிம் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு


கத்தார் நாட்டில்  இயங்கும் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான விசேட தலைமைதத்துவ  கருத்தரங்கு ஒன்றினை  இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

*இஸ்லாமியப்பார்வையில்  சமூக சேவையும் சமூக அமைப்புகளும்*

என்ற தலைப்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட  இந்நிகழ்வில்  50 அமைப்புக்களின்  தலைவர்,செயலாளர் அல்லது   பிரதிநிதிகள் கலந்து பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த 29/12/2017 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை 
பல்லாண்டு அனுபவம் பெற்ற பயிற்றுவிப்பாளர் கலாநிதி முபாரக் மதனி அவர்கள் இலங்கையில் இருந்து வந்து சிறப்பித்தார்.

கத்தார் இலங்கை தூதுவராலயத்தில் பதியப்பட்ட அமைப்பாக இயங்கும், இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் (FSMA-Q) கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒருகுடையின் கீழ் இணைத்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக  நடாத்த உதவிய  அனைவருக்கும் FSMAQ தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது

ரிஸ்லான் பாரூக்
பொதுச்செயலாளர்
Federation of Sri Lankan Muslim Associations Qatar


No comments

Powered by Blogger.