Header Ads



சிராஜ் மஷூருடன், கை கோர்ப்போம்


கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இலங்கை முஸ்லிம் சமூகம் தலைமையிழந்து திக்கு திசைமாறி வெள்ளத்தில் அள்ளுண்ட சருகுகள் போல நிரந்தர புகளிடமிழந்து அங்கும் இங்குமாக அலைந்து திரிவதை எமது கண்ணூடாக பார்க்கிறோம்.

இந்த கையறு நிலையினால் எமது சமூகம் அடைந்த வேதனைகளையும் இழப்புகளையும் இன்றும் நாம் பேசிக்கொண்டும் தான் இருக்கிறோம்.

நாம் முறையிட்டு, எதிர்பார்ப்பதும்; யாரேனும் வந்து வாக்களிப்பதும்; பின்பு நாம் ஏமாந்து போவதும் தான்; எமது விதியாயிற்று.

எமது வலியையும் ஆதங்கத்தையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்நிலை மாற வேண்டும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் முன்னின்று உழைக்க வேண்டும். எமது சமூகத்தை காக்கும் கேடயமாக நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

எமது சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் கொண்டு சேர்ப்பதினூடாக பிற மத சகோதர சகோதரிகளுக்கு எம்மீது ஏற்பட்டு இருக்கும் "பிழையான சிந்தனைகளை" களைய வேண்டும். அதற்கான முறையான தெரிவுகளும் வழிப்படுத்தலும் அவசியமாகிறது. தேசிய அரசியலில் முஸ்லிம்களுக்கான வகிபாகத்தை மீண்டும் பெறவேண்டும் அதனூடாக எம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மிக வேதனையுடனும் வருத்தத்துடனும் எழுதுகிறேன். கடந்த காலங்களில் தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பும் அதனால் முஸ்லிம்கள் மீது பிற மத சகோதர்கள் வைத்திருந்த கண்ணியத்தையும் மதிப்பையும் சற்று சிந்தித்து பாருங்கள்.

நாம் இழந்த கௌரவத்தையும் கண்ணியத்தையும் மதிப்பையும் மீண்டும் பெற வேண்டும். இந்நாட்டில் முஸ்லிங்கள் பிற மத சகோதர சகோதரிகளுடன் கை கோர்த்து ஒற்றுமையாக தலை நிமிர்ந்து வாழவேண்டும். இதற்காக எம்மை அர்ப்பணிக்க வேண்டும். இதனூடாக மாத்திரமே நாம் எதிர்பார்க்கும் மாற்றம் உருவாகும்.

நடந்து முடிந்த கசப்பான நிகழ்வுகளையும் சம்பவங்களையும் பற்றி சிந்தியுங்கள். நமது சமூகமும் நமது சமூக தலைவர்களும் தவறு செய்த இடங்களை கண்டறிந்து அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.

இலங்கை முஸ்லிங்கள் பிற மத சகோதர சகோதரிகளுடன் ஒன்றாக ஒற்றுமையாக வாழவேண்டும். கடந்தகால பகையுணர்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். இந்த பிரபஞ்சத்திற்கு முன்மாதிரியாக திகழும் முஸ்லிம்களால் மாத்திரமே இவ்வேலைத்திட்டத்தை திறன்பட செய்ய முடியும்.

கொள்கையில் உறுதியான மனிதர்களையும் கறை படியாத உள்ளங்களையும் எமது தெரிவுகளாக்க வேண்டும். நிச்சயமாக, அவர்களின் சொல்களும் செயல்களும் சிந்தனைகளும் இஹ்லாஸானதாக இருக்கும். சுயநலமில்லாத பொதுநலம் கொண்ட உள்ளங்கள் அவர்களின் முயற்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சுயலத்திற்காகவும் பதவிக்காகவும் புகழுக்காகவும் பிரிவினையை ஏற்படுத்தி முரண்பாடுகளையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விடும் போது எமக்குள் ஏற்பாடும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் உணர்வுகளுக்கும் திட்டமிட்டு பதில் சொல்லவேண்டும்.

மேலெந்து வாரியாக பேசிவிட்டு செல்வதற்கு நாம் ஒன்றும் சாமானியர்களல்ல. கொள்கை பற்றுடனும் ஈமானிய உறுதியுடனும் சுவனவத்திற்காக உழைக்கும் இலட்சிய மனிதர்கள்.

இந்த உள்ளூராட்சி தேர்தல் வெறும் கனவல்ல. மாற்றத்திற்கான ஆரம்பம். நமது ஒவ்வொரு வாக்கும் நமது நாட்டு மக்களின் நின்மதியையும் சந்தோஷத்தையும் சகவாழ்வையும் உறுதிப்படுத்தும் சக்தியாக திகழ வேண்டும்.

இங்கிருந்து ஆரம்பிப்போம் நாம் இழந்த கண்ணியத்தையும் மதிப்பையும் மீண்டும் அடைந்து கொள்ள வாருங்கள் சகோதர சகோதரிகளே.

நாம் மாறவேண்டுமா? 
நமது உள்ளங்கள் மாற வேண்டும் 
நமது சிந்தனை மாறவேண்டும் 
நமது எதிர்பார்ப்புகள் மாற வேண்டும் 
நமது விருப்பு வெறுப்புக்கள் மாற வேண்டும்
வாருங்கள் சகோதரர்களே..
மாற்றத்தை ஆரம்பிப்போம் 
அதற்காக கை கொடுப்போம் 
அதன் பங்காளர்களாக மாறுவோம்.

AJ - 16.01.2018

2 comments:

  1. Siraj Masoor is very honesty and highly intellectual graduate. I believe that Muslim community must and should select people like him as leader of the community.

    may Allah bless him

    ReplyDelete
  2. அஸ் ஸலாமு அலைக்கும்,

    புரிகிறதது உங்கள் கவலை. சகோதாரரே உங்கள் முடிவுகளை எடுக்கும்போது அல்லாஹுத்தஆலா வின் மீது தவக்கல் வைத்து எடுத்தீர்களோ தெரியாது? அப்படி எடுக்கப்பட்டிருந்தால் நடப்பவை அனைத்துமே அல்லாஹ்வின் உதவிகளாகவே கருதப்படவேண்டும். மாறாக நீங்களோ, உங்கள் சமூகமோ முடிவெடுத்து ஏமாறினால் யார் பொறுப்பு? சொல்லுங்கள் எந்த அடிப்படையில் நாம் மாறவேண்டும்?
    இஸ்லாம் எனும் பரிபூரணப்படுத்தப்பட்ட இறை மார்க்கத்தின் அடிப்படையிலா? அல்லது கொள்கை முரண்பாடுகளில் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் முளைத்து நிட்கும் இஸ்லாத்தின் பெயரில் இயங்கும் இயங்களின் கொள்கைகளிலா? தப்லீக் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாத் போன்று உள்ள பல இயக்கங்களின் கொள்கைகளிலா? புனித குர்ஆனையும், ஹதீஸ் களையும் யாப்பாக கொண்ட பல கட்சிகளின் கொள்கைகளிலா?
    அல்லது இவர்களைப்போன்று "அந்நூர்" என்று இயங்கி "ஊரின் படித்த புத்திஜீவிகள்" என்ற மாயவலையில் சிக்க வைக்க பார்க்கும் இவர்களின் கொள்கைகளிலா?
    ஊருக்கு உபதேசம் நடைமுறையில் மறைமுகமாக பள்ளி நிர்வாகங்களை அபகரிக்க முயலுவதிலா? தமது அங்கத்தவர்களை பொது விடயங்களில் பிழை காணமல் இருப்பதிலா? அவதூறுஅல்ல சொல்கிறேன் இவர்களில் ஒருவர் இதே மாநகர சபை வேட்ப்பாளர், அவர் ஒரு பள்ளியில் உதவிச் செயலாளர், பள்ளிக்கு வக்பு செய்யப்பட்ட ஒரு சொத்தை, ஒரு தனியார் அபகரிப்பதை பார்த்துவிட்டு முறைப்பாட்டில் கை எழுத்து போடமறுத்தவர். இவர்களைப்போல ஆட்களை வேட்ப்பாளர்களாக தெரிவுசெய்வது எதற்காக கொள்கைக்கா? இல்லை. உங்களை ஏமாற்றி வாக்குகளை கொள்ளை அடிப்பதற்காக அவ்வளவுதான்.
    இதில் இவர்கள் எல்லோருக்கும் இடையில் வேற்றுமையில் ஓர் ஒற்றுமை. ஆம், பலவர்ணங்களில், பல சின்னங்களில் நம்மை ஏமாற்றுவது.

    NFGG என்றொரு கட்சியை தொடங்கி சமூகத்திட்கு என்று ஒரு சரியான கொள்கையை இன்னும் முற்று முழுதாய் முன்வைக்காமல் விபச்சாரியைபோல் நேரத்திட்கு ஒருகொள்கை, நேரத்திட்கு ஒருசோடி அல்லது கூட்டு என்று மாறும் இவர்களின் கொள்கைகளிலா?

    மக்களே நடப்பவற்றில் ஒன்று மட்டுமே உண்மை. ஆம் நானும், நீங்களும் இஸ்லாத்தின் பெயரால் பிரியக்கூடிய அந்த 73 கூட்டத்தில் ஏதோ ஒன்றில் இருக்கிறோம். நயவஞ்சகர்களுக்கு மத்தியில் ஏமாற்றப்பட்டவர்களாக.

    ஆம். நான் மாறவேண்டும் இன்ஷா அல்லாஹ் ஒரு முஸ்லிமாக, அல்லாஹுத்தஆலாவிடம் பொருத்தம் பெற்றவனாக.

    ReplyDelete

Powered by Blogger.