Header Ads



“நாங்கள் போட்டியாளர்கள்தான், எதிரிகள் கிடையாது” (வைரலாகும் புகைப்படம்)


ஐ.சி.சி.யின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.  

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச் நகரில் =அரையிறுதி போட்டி நடந்தது. போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு அனைத்து தரப்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வெற்றி அவருக்கான வெற்றியாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரிக்கெட், ஹாக்கி போட்டி என இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடைபெறும் போட்டியானது உலக அரங்கில் அதீத கவனம் பெறும். கிரிக்கெட் போட்டியாக இருந்தால் இரு நாட்டு அணிகளும் மோதும் போட்டியில் அனல் பறக்கும். உலக கோப்பையில் இரு அணிகளும் மோதும் போட்டிக்கான வருவாயும் அதிகமாகவே இருக்கும், இதுபோன்று பார்வையாளர்களும் உலக அரங்கில் அதிகமாகவே உள்ளனர். இருநாட்டு வீரர்களும் ஆக்ரோஷமாக பேசும் வார்த்தையும், பாகிஸ்தான் டீவி உடைப்பும்தான் இதுவரையில் செய்தியாகியது. இப்போது சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

“நாங்கள் போட்டியாளர்கள்தான், எதிரிகள் கிடையாது,” என்ற வாசகம் தாங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருநாட்டு வீரர்களும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் காட்சிதான் அதுவாகும்.

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, களத்திலிருந்து ஷுப்மன் கில்லின் ஷூ லேஸ் எதிர்பாராத விதமாக அவிழ அதனை பாகிஸ்தான் வீரர் ஒருவர் சரிசெய்தார். அடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது, இதேபோன்றதொரு நிலை உருவாக இந்திய வீரர் ஒருவர் உதவிக்கு வந்து ஷூ லேஸை சரி செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.