Header Ads



எங்களுக்கு ஒரு, சந்தர்பத்தை தாருங்கள் - றிஷாத்

-எப்.முபாரக்-

நல்லாட்சி அரசாங்கம் செய்த சாதனை தான் வட்டார தேர்தல் முறையை ஏற்படுத்தியது,என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுத்தின் தெரிவித்தார்.                       

கிண்ணியாவில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் வேற்பாளர்களை ஆதரித்து கிண்ணியா நகர சபை மைதானத்தில்  நேற்றிரவு(8) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

திருகோணமலை மாவட்டத்தில் ஆறு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என்றும் மக்கள் தற்போது அலை அலையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றார்கள் தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே பத்தொன்பது சபைகளில் நாங்கள் களமிறங்கியிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய சவாலாக மாறிவிட்டோம்,எமது சமூகம் இந்த நல்லாட்சியை கொண்டு வருவதற்கு பாரியளவு கஸ்டப்பட்டிருக்கின்றோம்.

இன்று பெரும் பான்மை பௌத்த குருமார்கள் எனக்கெதிராக பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றார்கள் வில்பத்தை அழித்து நான் வீடுகளை கட்டுவதாக என் மீதுகுற்றம் சாட்டப்படுகிறது .நான் ஒரு அடிக்காணியை கூட எடுக்க வில்லை என தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.                       நல்லாட்சி அரசை எமது சமூகம் கொண்டு வந்தது பள்ளிக்கு கல்லெறியவா, அல்லது வங்குரோத்து செயற்பாடுகளை மேற்கொள்ளவா இல்லை சமூகத்திற்கான குரலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

இம்மாவட்டத்தில் அநிதி ஏற்படுகின்ற போது அதனை பாராளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும்.முஸ்லிம் தமிழ் மக்களின் இனவாத கருத்துகளை கக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.இனவாதிகள் எப்படி, எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் போராடுவோம் ஏன் என்றால் நாங்கள் தப்புச் செய்ய வில்லை,நாங்கள் தற்போது அரசின் பங்காலிக் கட்சியாக இருந்து கொண்டிருக்கின்றோம்.நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்தீர்கள்,ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும்  வாக்களித்தீர்கள் அவர்கள் செய்தது என்ன!ஒன்றுமே இல்லை எங்களுக்கு ஒரு சந்தர்பத்தை தாருங்கள் அது சமூகத்தின் குரலாக ஒளித்துக்கொண்டிருக்கின்றது,அன்று மர்ஹூம் அஸ்ரப்போடு இருந்தவர்கள் இன்று தூக்கி வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

> நாளை மக்கள் தருகின்ற ஆணைதான் ஐனாதிபதியோடும், பிரதமரோடும் போட்டியிட்டு பேசுகின்ற சக்தியாகமாறும் என்றார்.                        இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப்,இஸாக் ரஹ்மான்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத் மஜித்,முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மற்றும் கட்சி பிரமுகர்கள் வேற்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.     

1 comment:

  1. இன்ஷா அல்லாஹ் இந்தமுறை நிச்சயமாக உங்களுக்குத்தான் எங்களது முழு ஆதரவும்.
    பேசுங்கள் தஹ்ரியமாக பேசுங்கள்.விடியலை நோக்கி காத்திருக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் முழு ஆதரவும் உங்களுக்குத்தான்.

    ReplyDelete

Powered by Blogger.