Header Ads



மஹர் கொடுக்கும், தூக்கணாங் குருவி


-Hoorulayn Leeza-

ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். 

சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது.

உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். 

ஆனால், அந்த பறவை கூட 

மஹர் என்ற திருமணக்கொடை பெண் குருவிக்கு கொடுத்து தான் தனது வாழ்க்கையை தொடங்கும் என்பது யாருக்காவது தெரியுமா ?

கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. 
இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை.

இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, 

காற்றினால் கீழே விழுவதில்லை, 

மழை நீர் உள்ளே இறங்குவதில்லை. தூக்கனாங் குருவியின் இனத்தைப் பொறுத்தவரையில் ஆண் தூக்கனாங் குருவி தான் எப்போதுமே தனது வீடான கூட்டைக் கட்டும் அதில் நாம் வசிப்பது போன்றே பல அறைகள் இருக்குமாம்.

கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும்  (என்னை பார் என் கூட்டை பார்). 

பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும்.

ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார் போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. பின் கூடு முழுமையடையும்.

பெண் தூக்கனாங் குருவியானது ஒவ்வொரு கூட்டிலும் நுழைந்து எந்த ஆண் தூக்கனாங் குருவி கட்டிய வீடு தனக்கு பிடித்திருக்கிறதோ அந்த ஆண் தூக்கனாங் குருவியை தன் துணையாக்கி அதனோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து  இனப் பெருக்கம் செய்யுமாம்.

சுப்ஹானல்லாஹ் எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்கள். 

ஆனால் மனித சமுதாயம் வரதட்சனை என்ற பெயரில் பெண்ணுடைய வாழ்க்கையையே சுரண்டிக் கொண்டிருக்கிறது. 

சாதாரண பறவையிலிருந்து எவ்வளவு பெரிய ஒரு படிப்பினையை அல்லாஹ் காட்டியுள்ளான்.

3 comments:

  1. வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 16:79)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Superb article with great examples

    ReplyDelete

Powered by Blogger.