Header Ads

மீளவும் தவறு இழைக்கும், மனிதனல்ல இந்த மகிந்த ராஜபக்ச

ஒரு தடவை விட்ட பிழையை மீளவும் விட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தடவை தமது ஆட்சிக் காலத்தில் இழைத்த பிழைகளை மீளவும் இழைக்கப் போவதில்லை.

மீளவும் தவறு இழைக்கும் மனிதனல்ல இந்த மகிந்த ராஜபக்ச. மைத்திரிபால சிறிசேன, பிரதமரை விரட்டிய விதம், பிரதம நீதியரசரை பணி நீக்கிய விதம், 41 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பிரதமராக்கிய விதம், புதிய பிரதம நீதியரசரை நியமித்த விதம் என்பன வரலாற்றில் எழுதப்பட்டு விட்டன.

இதனையா நல்லாட்சி என்று கூறுவது, ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட போதே நல்லாட்சி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பில் யாரை நியமிப்பது என்பது பற்றி தீர்மானிக்கவில்லை.

எம்மிடம் பல தலைவர்கள் இருக்கின்றார்கள், வெளி நபர்களும் இருக்கின்றார்கள்.மக்கள் யாரை கேட்கின்றார்களோ மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Allah gave you so many chances.
    Like wise fir awn.fir awn oppressing people.god driven out him like you.sorry sir

    ReplyDelete
  2. இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை செய்து மக்களை அச்சத்தில் இருந்து விடுவித்த ஆயுதப்படைத்தளபதி சரத் பொன்சேகாவை கேவலப்படுத்தி ஜம்பர் உடுத்தி சிறையில் தள்ளிய விதம், பிரதம நீதியரசர் ஷிரியாணி பண்டாரநாயக்கா அவர்கள் நாட்டின் நலன் கருதி நேர்மையாக நடந்து கொண்டமைக்காக கேவலப்படுத்தி சீரழித்து நீதியரசரை அவமானப்படுத்தி பதவியிறக்கிய விதம் அனைந்தும் இந்த நாட்டு மக்கள் மறக்கவே இல்லை.

    ReplyDelete
  3. மகிந்த அவர்கள் வைத்திருந்த ஆட்சி அதிகாரத்தை கொண்டுதான் மைத்திரி
    அவ்வாறு செயல் பட்டார் என்பதை மகிந்த மூடிமறைக்கப் பார்க்கின்றார்.அதுவும் இவரால் அநீதி இளைக்கப்பட்வர்களுக்கு விமோசனம் வழங்கவே மைத்திரி அவர்கள் அவ்வாறு செயல்பட்டாடர் என்பது மக்களுக்கு அப்போதே நன்றாக தெரியும் என்பது வெளிப்படையானது. தான் நினைத்ததை, நிதைத்த நேரத்தில் செய்து முடிக்கின்ற வல்லமையை பெற சட்டங்களையும் அரசியல் சாசனத்தையும் தனக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு இவரும் இவரைச்சார்ந்தவர்களும் போட்ட ஆட்டங்களை எப்படி நன் மக்களால் ஜீரணிக்கமுடியும்.
    ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் தாம்பதவிக்கு
    வந்தவுடன் பத்தொன்பதாவது அரசியல்
    சீர்தருத்த சட்டத்தை கொணடுவந்து
    மகிந்த கொண்டிரந்த ஜனாதிபதிக்கான
    வல்லதிகாரங்களை இல்லாம் செய்து நல்லாட்சியைதை தோற்றுவித்திருப்பதை இவர் உணராமல் இருக்கலாம். மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.எனவே மகிந்த ராஜபக்ஸ அவர்களின் பருப்பு மக்கள்
    மத்தியில் இனிவேகாது எனபதுதான்
    உண்மை.

    ReplyDelete
  4. மகிந்த அவர்கள் வைத்திருந்த ஆட்சி அதிகாரத்தை கொண்டுதான் மைத்திரி

  5. Salaams,

    The Sri Lankan Muslim Community should view/see this political program, Insha Allah.

    "The Muslim Voice".

    http://www.hirutv.lk/watch/13590/salakuna/episode123/2018-01-29

    ReplyDelete

Powered by Blogger.