Header Ads



கோத்தாய தவறிழைத்துள்ளார் - சட்டமா அதிபர் ஆதாரத்துடன் விளக்கம்


வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போதே, இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர்.  நினைவிடத்தை அமைப்பதற்கு சிறிலங்கா கடற்படையினரைப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நீடிப்புச் செய்துள்ளது.

2 comments:

  1. மூக்கு பீ போல பெளடர் வைத்திருப்பவனுக்கு மரண தண்டனை. எத்தனையோ கொலைக்குற்றங்களுக்கு பொறுபானவனை கைது செய்து மரண தண்டனை வழங்காமல் ஏதே சொச்சம் கணக்கான 90 மில்லியன் கதை கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete
  2. வாழ்க ஜன நாயகம் குடியானவனின் அம்மிக்குளவியை அரச அதிகாரியின் முட்டை உடைத்த கதைதான்.

    ReplyDelete

Powered by Blogger.