January 22, 2018

கண்டியில் இன்று, ஜனாதிபதி ஆற்றிய உரை

-JM.Hafeez.

யுத்த வீரர்களின் முக்கிய பிரதானியான சரத் போன்சேக்கவை சிறையில இட்ட அடைத்தவர்கள் எம்மைப்பாத்து இந்த அரசு யுத்த வீரர்களை வேட்டையாடுவதாகக்  குறை கூறுகின்றனர் என்று ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனா தெரிவித்தார்(இன்று 22.1.2018.) 

குண்டி மத்திய சந்தை முன் இடம் பெறற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாபெறும் பிரசாரக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-

 சரித்திரப்பிரசித்தி பெற்ற ஸ்ரீதலதாமளிகை அமைந்துள்ள கண்டி மாநகரில் உங்களைக்கு உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மூன்று வருடங்களுக்கு முன் பொது வேட்பாளராக உங்கள் முன்னிலையில் வந்து இந்த மண்ணில் வாக்குக் கேட்டேன். அதன் வெளிப்பாடாக் 62 இலட்சம் வாக்குகளால் என்னை வெற்றி பெறச் செய்து இந்நாட்டின் பிரதான குடி மகனாக என்னை ஆக்கினீர்கள். 

ஆங்கிலேயரு எதிராகப் போராடி இன்று 200 வருடங்களாகின்றன.  1818ல் ஏற்பட்ட கிளர்ச்pக்கு இன்று  200 வருடம் ஆகிறது.  தேசி பேராட்டம் முன் எடுக்கப்பட்டு 1947 ன் பின் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. பின் பல ஆட்சிகள் மாற்றம் பெற்றன. இன்று தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காலம். எனவே சர்வதேச நாடுகளின் வளர்ச்சியுடன் எம்மை ஒப்பிட்டு ஏன் அபிவிருத்தி செய்ய முடியாது என்று கேட்கின்னறனர். 

எமது நாடு பல வந்தர்ப்பங்களில் ஆட்சி அதிகாரத்தை ஆட்சியாளருக்கு வழங்கிய காலம் உண்டு. குறிப்பாக பண்டாரநாயக்காவிற்கு அதிகாரத்தை வழங்கினர். இதனால் எமக்கென்ற மொழி கலாச்சாரம் பன்பாடு போன்ற துறைகளில் அபிவிருத்தி அடைந்தது. அதே போல் பண்டார அடிப்பாதையில் ஸ்ரீமாவோ ஆட்சி புரிந்தார். ஸ்ரீமாவின் கண்ணீரில் உருவான ஒரு கட்சிதான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியாகும்.  எமது தேச பிதா டி.எஸ். சேனாநாயக்கா தூர நோக்குடன் ஆட்சி புரிந்தார்.  ஆனால் நாட்டை கொள்ளையிட வில்லை. அவர் மரணிக்கும் போது அவரிடம் 460 ரூபா பணம்தான் கைவசம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே போல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது ஆட்சி காலத்தில் தமது அரசால் மேற்கொண்ட சட்டத்தைக் கொண்டு அவருக்குச் சொந்தமான ஆயிரக்ணக்கான காணிகளை மக்களுக்கு  வழங்கிளார். இவ்வாறு நம் நாட்டை அபிவிருத்தி செய்யும் சந்தர்ப்பம் பல ஏற்பட்டன. அதேபோல் 2009 யுத்த முடிவின் பின் இன்னும் நாட்டை கட்டி எழுப்ப சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முடியவில்லை. நாட்டு மக்கள் அன்று பாதையில் இறங்கி வெற்றி களிப்பில் இருந்தனர். ஆனால் அ
க்களிப்பு நிரந்தரக்களிப்பாக்கப் படவேண்டும்.

துண்டாடப்பட்ட நாடு ஒரு நாடாக இணைக்கப்பட்டாலும் சரியான வேலைத்திட்டம் இல்லை. சர்சதேச அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. நாடு பயங்கர நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டது. சர்வதேச நாடகள் யுத்த மீறல்கள் எனக் கூறி அச்சுறுத்தல்கள் விடுத்தன.  நான் தெளிவாகக் கூற வேண்டிய விடயம் 2015ல் உலக நாடுகள் 196 எம்முடன் பகைத்துக் கொண்டிருந்தளர்.அவ்வாறான ஐக்கிய நாடுகள் சபையில்அங்கம் வகிக்கும் பல நாடுகளுக்குச் சென்று நான் தெளிவு படுத்தினேன்.  நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவி கோரினேன்.

சர்வதேச நீதி மன்றில் எமது யுத்த வீரர்களை நிறுத்தும்  பிரச்சினையைத் தீர்த்து வைத்தேன். மீன் ஏற்றுமதி, தைத்த ஆடை ஏற்றுமதி போன்ற பல தடைகளை நீக்க நடவடிக்கை எடுத்தேன். நாடு நல்ல முறையில் நிர்வகிக்க திட்டமிடப்பட்டது. இன்று பத்திரிகைகளில் அடிக்கடி மகிந்த அணியுடன்  இணையும் படி கூறப்பட்டு வருகிறது. ஆனால் மகிந்த ராஜபக்ச மூன்று வித  தோல்விகளை சந்தித்தவர்.

முதலாவது தோல்வி  2014 தேர்தல் எடுத்துக் கொள்ள முடியும்.  நான் முதற்கொண்டு முக்கியமான பலர் அன்ற தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டாம் என்று பலர் கூறினர். ஆனால் அவர் அதனைக கேட்கவில்லை. மேலும் நாட்டிற்கு தாங்க முடியாத கடன் சுமையை ஏற்படுத்தினார். இருப்பினும் பலவந்தமாக தேர்தலுக்குச் சென்று தோல்வியைத் தழுவினார். காலத்திற்கு முன் தேர்தலை  வைத்ததற்குக் காரணம் அதுவேயாகும். 

தேர்தல் வந்த போது 49 அமைப்புக்கள் என்னுடன் இணைந்து  வெற்றி பெறச் செய்தனர். எனக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்ககள் 15 சதவீதமே எனக்குக் கிடைத்தன.  மகிந்த அதனை அடுத்து இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டார். மத்திய வங்கி பற்றி அவர் பெரிதாகப் பேசுகிறார். ரவி கருனாநாயக்காவிற்கு  எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரனை கொண்டு வரப்பட்ட போது  மகிந்த ராஜபக்ச வாக்களிக்கவில்லலை. ஆனால் வாக்களிப்பு முடிந்து வெளியே வந்த போது  ரவிக்கு வாழ்துத் தெரிவித்தார். சுப செய்தியைத் தெரிவித்தார். அவருக்கு எதிராக வாக்களிக்க வில்லை. 

யுத்த வீரர்களை வேட்டையாடுவதாகக் என்மீது குறை கூறுகின்றனர். ஆனால் யுத்த வீரர்களின் முக்கிய மான தலைவர் சரத் போன்சேக்கவாகும். யுத்தத்திற் லைமை தாங்கியவர். ஆனால் அவரை சிறையில் தள்ளினர். அவ்வாறு யுத்த வீரர்களை  பலிவாங்கும் நடவடிக்கைகளில்  நாம் .றங்கவிலலை. இந்த நாட்டு யுத்த வீரர்களுக்கு வீடுதலையை ஏற்படத்திக் கொடுத்தவன் நான். 

நாம் நாட்டை துண்டாடுவதாகக் கூறுகின்றனர். இராணுவ  தலைமையகம் இன்றில்லை. நாட்டை விற்பதாக கூறும் அவர்கள் இராணுவ தலைமையகத்தை சின்னக்கரைக்கு விற்றனர. இராணுவ தலைமையகத்தை துண்டாடி ஹோட்டல் கட்டியுள்ளனர். இன்று  மாதம் 43 மில்லியன் தலைமையகத்திற்காக கூலி கொடுக்கப்பட்டு வருகிறது. வருடம் 500 மில்லியன் வாடகை செலுத்ப்படுகிறது. 

உங்களுக்கு நல்ல புத்தி உண்டு. சிற்தனையுண்டு சின்னக்கரைக்கு கொடுக்கப்படும் உடைமைக்கு என்ன நடக்கும. நாம்; யாரும் அப்படிச் செயயவில்லை. ஆனால் பொர்ட் சிடியை அமைக்க 240 ஏக்கரை சீனாவிற்கு விற்க நடவடிக்கை எடுத்தவர்யார். எந்த ஒரு அரசும் அப்படிச் செய்யவில்லை. மகிந்தவின் அந்த போர்சிடி உடன் படிக்கைக்கு நான் கைசசாத்திடவில்லை.

எமது நாட்டுக் காணியை பிறநாட்டுக்கு விற்க நான் விரும்ப வில்லை பின்னர் குத்தகை அடிப்படையில் அதனை மாற்றினோம். ஆனால் நாம் நாட்டை விற்பதாக அவர் எம்மீது குறை கூறுகின்றனர்.

இந்த நாட்டில் கற்றவர்கள் உள்ளனர். அரசியல் செய்பவர்களில் 50 வீதமானர்கள் பணமீட்வந்தவர்கள். ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் இருப்பதற்கு இதுவே தடையாக உள்ளது.

 ஜி.எல். பீரிஸ் தலைமை தாங்கும் கடசியினர் பாய்ந்து பாய்ந்து முறி மோசடி பற்றிப் பேசுகின்றனர். 2007 ல் இருந்தே முறி மோசடி நடந்துள்ளது.

மத்திய வங்கி முறிமோசடி தொடாபாக  2007 இருந்து 2017 வரை மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு கூறுகின்றேன். தங்களது பிரதேசங்களின் அபிவிருத்தி செய்ய வேண்டிய பணத்தை அல்லவா நீங்கள் கொள்ளையிட்டுள்ளீர்கள். நான் ஊழலுக்கும் குடும் வாதத்துக்கு எதிராக வந்தவன். அளவுக்கதிகமான ஆசை நல்ல தல்ல என்று தொடர்புடைய இரு சாராருக்கும் கூற விரும்புகிறேன்.

நான் அன்று அரசிலிருந்து தேரதலுக்காக வெளியான  போது எனக்கு குறை கூறினர். யுத்தத்தை வெற்றி பெற மகிந்த மட்டுமல்ல பலர் பங்களிப்புச் செய்தனர். யுத்தகாலத்தில் என்னையும் குறி வைத்திருந்தனர். 'தசமகா யோதயா' போல் நாம் இருந்து உதவினோம்.

நான் ஊழலுக்கு மோசடிக்கு களவுக்கு எதிரானவன். ஐ.தே.க. ஸ்ரீ10லங்கா சுதந்திரக்கட்சி என்பவற்றுக்கு எதிரானவன் அல்ல. 2015ல் தோல்வி அடைந்த கட்சியையே எனக்கு தந்தனர். நான் படிப்படியாக கட்சியை கட்டி எழுப்பினேன். சுதந்திர தினத்தையும் வருடாந்த கூட்டங்களையும் நடத்தினோம். படிப்படியாக மக்கள் கூட்டம் அதிகமானது. 

நாம் பண்டாரநாயக்கா தத்துவங்களுடன் பேசுகிறோம். டி.பி. இலங்கரத்தன சாதாரண இலிகிதர். சாதாரண மக்களே இக்கட்சியில் தலைமை தாங்கினர். எமது இளைஞர், மகளிர் பிரிவுகள் சக்தி மிக்கதாக்க வேண்டும். 

மட்டக்களப்பில் பாரிய கூட்டம் என்னை வரவேற்றது. இதேபோல் ஏனைய இடங்களிலும். திருகோணமலையிலும் அவ்வாறே. மட்டக்களப்பில் 90 சதவீதம் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். 
பிரதேச சபை என்பது கிராம சபைகளாகும் (கம்சபாவாகும்). கிராமங்களை அபிவிருத்தி செய்ய போதிய பணத்தை நான்; ஒதுக்கி;த் தருவேன். 

வாரத்தில் பல நாட்கள் கொழும்புக்கு பல்கலை மாணவர்கள் வந்து ஆர்பாட்டம் செய்கின்றனர். அவர்களை அடக்க ஆயுதம் கொண்டு செல்ல வேண்டாம் என்றுதான் நான் போலீசாரக்கக் சூறுகின்றேன். எனக்கும் பின்னைகள் உண்டு. ஆனால் மகிந்த ஆட்சியில் ரதுபஸ் ல் தண்ணீர் கேட்வர்களுக்கு வேட்டுக் கிடைத்தது.  பொருளாதாரத்தில் மாற்றம் தேவை. எமது குறைபாடுகளை நீக்க பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டியுள்ளது என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment