Header Ads



உன்னைக் கூறுபோட்டு விடுவேன் - ஜனாதிபதியை மிரட்டிய அவரது தந்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் உணர்ச்சி பொங்க சிறிய கதை ஒன்றை கூறியுள்ளார்.

நிதி மோசடி செய்வதும், அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வதும் பாவம் என்பதை சுட்டிக்காட்டியே அமைச்சரவையில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார்.

சுமார் 35 நிமிட நேரம் அமைச்சரவையில் மயான அமைதி நிலவ உரையாற்றியுள்ளார்.

சிறிய வயதில் ஊர்க்காரர் ஒருவர் சைக்கிள்களின் பிரேக் ஜோடிகளை திருடுவதில் பெரிய கில்லாடியாக இருந்தார். அப்படி திருடிய ஒரு ஜோடி பிரேக்கை அவர் என்னிடம் கொடுத்தார். நான் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றபோது எனது தகப்பனார் அது எப்படி என்னிடம் வந்தது எனக் கேட்டார்.

நான் உண்மைக் கதையைச் சொன்னேன். இப்படியான மனிதர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் உன்னைக் கூறுபோட்டு விடுவேன் என்று அப்போது தந்தை என்னைக் கடுமையாக கண்டித்தார்.

அந்தக் கண்டிப்பு என் மனதில் எப்போதும் இருந்தபடியால் நான் கள்வர்களுடன் பழகுவதை எப்போதும் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

உயர்தரப் பரீட்சை எழுதினாலும் பட்டதாரியாகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. கைவிலங்குடன் சிறையில் இருந்து வந்தே பரீட்சை எழுதியதால் வினாத்தாள்களிலும் இரத்தம் தோய்ந்தது.

அப்படியான அனுபவங்களுடன்தான் நான் அரசியலில் முன்னேறினேன். நான் ஒரு நல்ல இடதுசாரி. பண்டாரநாயக்கவின் கொள்கைகளையே நான் பின்பற்றுகிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாட்சியைக் கொண்டு செல்வதா? இல்லையா? என்பதை தம்மை விமர்சிப்பவர்கள் தீர்மானிக்க வேண்டும் என தம்மபதம் ஒன்றையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து அமைச்சரவையில் ஜனாதிபதி வெகுண்டெழுந்தமை தெரிந்ததே.

No comments

Powered by Blogger.