Header Ads



முடிந்தால் தனியாட்சி அமைத்துக் காட்டுங்கள் - ஐ.தே.க. க்கு சவால் விடுக்கும் அமைச்சர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி ஐக்கிய தேசியக் கட்சி முடிந்தால் தனியரசை அமைத்துக் காட்டட்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சவால் விடுத்துள்ளது.  அத்துடன், நாடாளுமன்றத் தேர்தல் முறையை மாற்ற ஐ.தே.க. சம்மதம் தெரிவித்தால் மாத்திரமே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சு.க. சம்மதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

"நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இரண்டு, மூன்று வருடங்கள்கூட இல்லாத அரசியல் முதிர்ச்சியற்ற சிலரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்ச்சிக்கின்றனர். பிரதான கட்சிகள்முதல் சிவில் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் எனப் பாரிய பிரளயமொன்றின் மூலம்தான் 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.

மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பளராக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் காரணம், ஊழல் மோசடிகளை ஒழிப்பேன் என மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளும், கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுமே.

பிணைமுறி மோசடியை விசாரணை செய்யவே ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். மாறாக, ஒரு கட்சிக்கு எதிராகச் செயற்படவில்லை. தனிநபரையோ அந்தக் கட்சியையோ ஜனாதிபதி இலக்குவைத்திருக்கவில்லை. ஆனால், மோசடியாளர்களைப் பாதுகாக்க அவர்கள் செயற்பட்டமையாலேயே மக்கள் அவர்கள் மீது சந்தேகம் கொண்டனர்.

ஜனாதிபதியை மீறி எவரும் தனியரசை அமைத்துவிட முடியாது. முடிந்தால் எவரும் அமைத்துக்காட்டட்டும் அதன் பின்னர் ஜனாதிபதி உரிய தீர்மானங்களை எடுப்பார்'' என்றார்.

1 comment:

  1. Hahaha...My3 vote ketkumpothu...Mahindakku support...
    Mahindavidam irunthu My3 ku jump pannittu ippo..katha alakkuraango..!

    ReplyDelete

Powered by Blogger.