Header Ads



மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படுமா..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது பாரிய ஊழல் மோசடிகளுடன் மஹிந்த தொடர்புபட்டுள்ளதாக ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாரியளவு அரசாங்க சொத்துக்களை தாம் விரும்பியதனை போன்று பயன்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி பல சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களுக்கு இலஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.