Header Ads



பதுளையில் காத்திருக்கும் ஆபத்து

இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 80 வீதமானவை இவ்வாறு புதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளது.

இவ்வாறான ஆபத்து நிறைந்த பகுதியில் 6000 குடும்பங்கள் உள்ளதாகவும், ஒரு இலட்சத்து 61 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

30 வருட யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட டைனமைட்டுகளை விடவும் அதிகமான டைனமைட்டுகள் பதுளை மாவட்டத்தில் ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஒருவரும் சிந்திக்கவில்லை எனவும், கற்பாறைகளை உடைத்து இலாபம் பெற்றுக் கொள்வதற்கு மாத்திரமே அனைவரும் சிந்தித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த மாவட்டத்திற்கான வரைபடம் ஒன்றை தயாரித்து வழங்குமாறு கோரினோம் எனினும் வழங்கப்படவில்லை. அதிக மக்கள் வாழும் பகுதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பதுளைக்கு ஆபத்து ஏற்பட்டால் முழுமையான இலங்கையின் விவசாயமும் பாதித்து விடும்.

சேனாநாயக்க சமுத்திரம், எலஹெர, பராக்கிரமபாகு சமுத்திரம், கிரிதலை, மின்னேரியா, கவுடுல்ல ஆகிய அனைத்திற்கும் பதுளை ஊடாகவே நீர் வழங்கப்படுகின்றது.

பதுளைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 9 மாவட்டங்களின் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.