January 31, 2018

வெலிக்காமத்தில் ஒரு சிக்கல் - ஜனாஸா குளிப்பாட்ட போகமாட்டோம் என மிரட்டல்

M.I. MOHAMED FAIROOZ 
(முஸ்லிம் விவாகப் பதிவாளர்)

வெலிகாமம், நகர சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து போட்டியிடுகின்ற, கல்பொக்கையைச் சேர்ந்த, புதியதெருவை வசிப்பிடமாகக் கொண்ட நஜிப்தீனின் தேர்தல் பிரச்சாரத் துண்டுப் பிரசுரம் மதுராப்புரயை இழிவுபடுத்தி அச்சிடப்பட்டுள்ளதால், அவ்வூரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தான் செய்த சேவைகள் எனும் கோதாவில் எழுதப்பட்டுள்ள அத்துண்டுப் பிரசுரத்தில், மதுராப்புர முன்னர் மிகவும் இழிவான ஒரு பெயருடன் இருந்ததாகவும், தானே அவ்வூரின் பெயரை மதுராப்புர என மாற்றி மக்கள் மனதில் இடம்பெற்றதாகவும் அத்துண்டுப்
பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும் பிரச்சினையுடன் மதுராப்புர மக்கள் எல்லோரும் மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக, ஒன்றுகூடியிருந்தபோது, இதுதொடர்பில் தெரியவருவதாவது,

மிகவும் பழைமையும், பண்பாடும் மிக்க, எமது ஊரை நஜிப்தீன், இழிவான பெயரொன்றைக் குறிப்பிட்டு, தானே அவ்வூரின் பெயரை மாற்றியமைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 1973 களுக்கு முன்னரே மதுராகொட, மதுராப்புர என்ற பெயர்களுடன்தான் எங்கள் ஊர் இருந்தது. வேறு எந்தவொரு பெயரும் எங்கள் ஊருக்கு இருக்கவில்லை.

கல்பொக்க, புதியதெரு ஆகிய ஊர்களைச் சேர்ந்த பெரும்பான்மையினர், எமது ஊரை “இழிப்பெயர்” கொண்டு, ஆரம்ப காலத்தில் மதுராப்புரயினர் ஏழையகளாக இருந்ததனால் அழைத்து அவர்களை அவமானப்படுத்தினர்.

இப்போது, பெரும்பான்மையினர் அவ்வாறு இல்லை. என்றாலும் ஒரு சில விச ஜந்துக்கள் இவ்வாறான மனோபாவத்துடனேயே இருக்கின்றன. எனவும்,

ஆனால், மதுராப்புர பெண்களை மையித்துக் குளிப்பாட்ட அழைக்கச் செய்கின்றனர். இவற்றிற்கு மதுராப்புர மக்கள் அவர்களுக்கு உசிதமாகவும் இருக்க,  அவ்வூர்களைச் சேர்ந்த இளம்பிஞ்சுகளின் மனதிலேயே மதுராப்புர பற்றிய தப்பபிப்பிராயத்தை வளர்ப்பதும் எவ்விதத்தில் சாத்தியமாகும் எனவும் குறிப்பிட்டனர்.

மேலும், இதுதொடர்பில் மதுராப்புரயைச் சேர்ந்த ஊர்மக்களில் பெரும்பாலானோர்  குறித்த நகரசபைக்கான வேட்பாளரைச் சந்திக்க உடனடியாக அவரது புதியதெருவில், பேபிமார்ட்டிற்குப் பின்புறமாகவுள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது, அவர் அங்கிருந்து இவர்கள் வந்த செய்தியைக் கேள்வியுற்றதும் தலைமறைவாகியுள்ளார்.

அவர்கள் அங்கு சென்று, நஜீப்தீனின் சகாக்களிடம், உடனடியாக மீண்டும் துண்டுப்பிரசுரம் அச்சிட்டு அதில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும், மதுராப்புரயின் வரலாறு பற்றித் தனக்குத் தெரியாது எனவும், தான் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காகத்தான் இவ்வாறான துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிட வேண்டும் எனவும், வெலிகம - மதுராப்புர மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வெள்ளிக்கிழமை வருகைதந்து, நஜீப்தீன் பகிரங்க மன்னிப்புக் கோருவதோடு, புதியதெரு முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலிலும் இதுதொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் சுமுகமான முறையில்  குறிப்பிட்டுள்ளனர். அங்கிருந்தவர்கள் அதற்கு இணங்கியுமுள்ளனர்.

அவ்வாறு நஜீப்தீன் பகிரங்க மன்னிப்புக்கோராதவிடத்து, அடுத்த கட்டமாக மாற்றுநடவடிக்கை எடுப்பதற்கு ஊரார் முழுமையாக இணங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதுதவிரவும், மதுராப்புர கிராமத்திற்கு வெளியில் ஏற்படும் பெண்களின் ஜனாஸாக்களைக் குளிப்பாட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் பெண்கள் போகமாட்டோம் என பெண்களும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

1 கருத்துரைகள்:

வெலிகமவில் பிரதேசவாதம் பல நூற்றாண்டுகளாக புரையோடியுள்ளது. சிறுவயதிலேயே பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு ஊட்டப்படுகின்றது. இன்று சற்றுத் தணிந்திருந்தாலும்... இச்செய்தி, மீண்டும் சூடுபிடித்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. விசமத்தனம் புரிவோருக்குத் தகுந்த புத்திபுகட்ட வேண்டும்.

Post a Comment