Header Ads



முஸ்லிம்கள் என்னை நிராகரித்திருந்தால், அரசியலில் உயர்ந்திருக்கமாட்டேன் - டி.எம். ஜயரட்ண

என்னைப் பிரதமர் பதவியில் அமர வைத்த பெருமை கலுகமுவ முஸ்லிம்களுக்கு  உண்டு என்று முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ண குறிப்பிட்டார்.

கெலிஒயா கலுகமுவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உடபலாத்த பிரதேச சபைக்குப் போட்டியிடும் ஏ.எஸ்.எம். உனைபை  ஆதரித்து கலுகமுவையில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் எனது அரசியல் வாழ்வை இக்கிராமத்தில் இருந்து கிராம சபை மூலம் ஆரம்பித்தேன்.  இக்கிராம வாழ் முஸ்லிம்கள் அன்று என்னை நிராகரித்திருந்தால்  எனது அரசியல் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வர முடியாமல் போயிருக்கும். எனவே என்னைப் பிரதமர் பதவியில் அமர வைத்த பெருமை கலுகமுவ முஸ்லிம்களுக்கு உண்டு.

முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல. முஸ்லிம்கள் நாடு முழுவதும் சிதறி வாழும் நிலையில் சகல கட்சிகளுடாகவும் தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

ஆனால் எக்கட்சியாயினும் காலத்திற்குக் காலம் ஆளும் கட்சியில் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்ச்சியாக அமையும் என்றார்.

இதில் பிரதியமைச்சர் அநுராத ஜயரட்ண மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் புர்கான் ஹாஜியார் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

-எம்.எம்.எம். ரம்ஸீன் -

No comments

Powered by Blogger.