Header Ads



மாதம்பை இஸ்லாஹிய்யா, பழைய மாணவரின் ஒன்றுகூடல்

மாதம்பை இஸ்லாஹிய்யாஹ் அரபுக் கல்லூரி- பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் ஒன்றுகூடலும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஏ.எம். ஸாதிக் இஸ்லாஹி தெரிவித்தார். 

எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 09:00 மணி முதல்  மாலை 04:30 மணி வரை நடைபெறவுள்ள நிகழ்வில் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களுடன் கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். 

மேற்படி நிகழ்வில் மாதம்பை இஸ்லாஹிய்யாஹ் அரபுக் கல்லூரி- பழைய மாணவர்களை தவறாது கலந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களை 077 264 9152 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.