Header Ads



ஜனாதிபதி மீது ஹரீன் பாய்ச்சல் - இவை எல்லாம் எம்மிடம் சரிவராது எனவும் எச்சரிக்கை


தற்போது நாங்கள் நியமித்த ஜனாதிபதி எமக்கு எதிராக பேசுகின்றார். இவை எல்லாம் எம்மிடம் சரிவராது. அவரை ஜனாதிபதியாக நாமே நியமித்தோம். இவரையா ஜனாதிபதியாக நியமித்தோம் என்று தற்போது நினைக்க முடியவில்லை.

எமக்கு பெரும் கவலையாக உள்ளது. ஜனாதிபதி அவர்களே வீண் வார்த்தை விட்டு விட்டு முன்னைய ஆட்சியின் போது உங்களுடைய சகாக்கள் செய்த திருட்டுகளுக்கு எதிராக முடிந்தால் நடவடிக்கை எடுத்து காண்பியுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ் உறுப்பினரும் அமைச்சரு மான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மத்திய வங்கி மோசடி திருடர்களை கண்டுபிடித்தது எமது ஜனாதிபதியாகும். நாமே அந்த ஜனாதிபதியை நியமித்தோம். நாமே திருட்டை ஒழிக்கும் செயல்முறையை கொண்டு வந்தோம்.

அதன்காரணமாக மத்திய வங்கி மோசடி விசாரணையை தீர்க்க முடிந்தது. எனவே இந்த தேர்தல் மிகவும் முக்கியமாகும்.

இதன்படி வாள்வெட்டுக்கு இலக்காகுவதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்கும் தேர்தலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு ஐக் கிய தேசியக் கட்சியின் கிளை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டை தற்போது சாதகமான நிலை மைக்கு கொண்டு வந்துள்ளோம். எம்மிடம் தவறுகள் இருக்கலாம். அதனை திருத்தி செல்வதிலேயே வெற்றி உள்ளது.

 எனினும் தற்போது மத்திய வங்கி மோசடி தொடர் பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய வங்கி மோசடி தொடர்பான குற்ற வாளிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இடம் கிடையாது. இதனுடன் சம்பந்தப்பட் டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கு மாறு கட்சிக்குள் நாம் போராடியுள்ளோம்.

நாம் சும்மா இருக்கவில்லை. இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக ஒருவரின் அமைச்சு பதவியை பறித்தோம். ஆனால் முன்னைய ஆட்சியில் இவ்வாறு நடக்கவில்லை.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் இழந்த 11 பில்லியன் ரூபாவை அரசுடமையாக்க வழக்கு தாக்கல் செய்து அந்த பணத்தை மீளப்பெறுவோம் என பிரதமர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆனால் முன்னைய ஆட்சியின் போது இவ்வாறு யாரும் கூறவில்லை. திருட்டுக்கு இடமளித்தார்கள்.

அனைவருக்கும் தவறு நடக்கும். மக்கள் விடுதலை முன்னணி ஆட்சி அமைத்தாலும் அந்த தவறுகள் நடக்கலாம்.

எனவே அதிகாரிகள் செய்கின்ற தவறுகளை அடிப்ப டையாக கொண்டு பிரதமர் மீது எப்படி பழிசுமத்துவது? எமது கட்சி தலைவர்கள்
திருடி விட்டு சென்றவர்கள் அல்ல.

அவர்களுக்கு சொந்தமான பணத்தை நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் வழங்கிவிட்டு சென்றவர்களாவர்.

தற்போது பெரிதாக கோஷம் எழுப்பும் சுசில் பிரேம்ஜயந்த, டிலான் பெரேரா ஆகியோர் இந்த ஜனாதிபதியை கொண்டு வரவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க முழு மூச்சுடன் நாம் செயற்பட்டோம்.

அவருக்காக பல தியா கங்களை செய்துள்ளோம். ஆனால் அதனை அவர் மறந்து விட்டார். எனவே இவரையா ஜனாதிபதியாக நியமித்தோம் என்று தற் போது எமக்கு கவலையாக உள்ளது.

நான் தற்போது அரசியல் ரீதியாக கடும் கோபத்தில் உள்ளேன். எனது அமைச்சு என்னை விட்டு சென்றாலும் பரவாயில்லை இதனை கூறியே ஆகவேண்டும். தற்போது நாங்கள் நியமித்த ஜனாதிபதி எமக்கு எதிராக சாடி பேசுகின்றார்.

இவை எல்லாம் எம்மிடம் சரிவராது. அவரை ஜனாதிபதியாக நாமே நியமித்தோம். ஜனாதிபதி அவர்களே வீண் வார்த்தைகளை விட்டு முன்னைய ஆட்சியின் போது உங்களுடைய சகாக்கள் செய்த திருட்டுகளுக்கு எதிராக முடிந்தால் நடவடிக்கை எடுத்து காண்பியுங்கள் என்றார்.

2 comments:

  1. Sort out central bank issue first and try to point some one. I don't think people vote to to rob bank.

    ReplyDelete
  2. There are green robbers and blue robbers. Some are caught and others are not. Sadly majority of them are robbers in these parties.

    ReplyDelete

Powered by Blogger.