Header Ads



ஜனாதிபதியின் பதவியை நீடிக்க, நீதிமன்றம் சென்ற சுமங்கல தேரர்

-Dc-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதிப் பதவிக் காலத்தை 6 வருடங்களாக கருத்தில் கொள்வதில் எந்தத் தடையும் இல்லையென  ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேரர் இன்று -10- நீதிமன்றத்தில் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 6 வருட பதவிக் காலத்துக்கே மக்களின் ஆணை கிடைக்கப் பெற்றது. இதன்படி, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையில் பதவியில் இருப்பதற்கு அவருக்கு எந்தவித தடையும் இல்லையென அவர் இன்று உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 5 வருட பதவிக் கால மாற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவில் தாக்கம் செலுத்தாது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.