Header Ads



"நிறைவேற்று அதிகார, ஜனாதிபதி முறைமை அவசியமில்லை" - மஹிந்த


பொருளாதார நடவடிக்கைகளை தாம் கையாளவில்லை என ஜனாதிபதி கூறுவாராயின், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர்தான் கையாண்டார் என நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் கூற முடியாது.

அப்படியாயின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஜே.வி.பியினரும் இணைந்தே இந்த அரசாங்கத்தை அமைத்ததாக அவர் கூறியுள்ளார்.

அவர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பதுபோல பாதுகாப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.