Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக, குற்றப் பிரேரணையா..?

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவினை திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது கடுமையான தொனியில் பேசியதனால், முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரே ஜனாதிபதியின் உரையை தயாரித்துள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதக நிலையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே இந்த அதிகாரி குறித்த உரையை கடுமையாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உரை கட்சிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.